உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: ‛லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிக்க நான் வந்துள்ளேன்: கமல்ஹாசன்

டவுட் தனபாலு: ‛லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிக்க நான் வந்துள்ளேன்: கமல்ஹாசன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: நாடு காக்க கட்சி வரைகோடுகளை அழித்து விட்டு, மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இங்கு வந்துள்ளனர். எல்லா கட்சி வேறுபாடுகளையும் மறந்து, லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிக்க நான் வந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழகம் காக்கும் வியூகம்.டவுட் தனபாலு: 'நோகாம நொங்கு திங்குறது'ன்னு கிராமங்கள்ல ஒரு சொலவடை உண்டு... அந்த மாதிரி, அடுத்த வருஷம் ராஜ்யசபா என்ற பின்வாசல் வழியா, பைசா செலவில்லாம பார்லிமென்ட்டுக்குள்ள நுழைய, 'துண்டு' போட்டு வச்சுட்டு வியூகம், தியாகம்னு ஜல்லியடிக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக முதல்வர் ஸ்டாலின்: நேற்று முன்தினம் மாலை செய்தி, தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலை செய்தி, அழகிய தமிழ்ச்சொல், 'வானொலி' இருக்க, ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். ஒரு பக்கம் கண்ணை குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம். கடந்த காலங்களில், தமிழகத்தில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த மோடி, இப்போது ஹிந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன.டவுட் தனபாலு: சில மாதங்களுக்கு முன்பு, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நீங்களும், டி.ஆர்.பாலுவும் கலந்துக்கிட்டப்ப, 'ஹிந்தி கத்துக்கிட்டு வாங்க'ன்னு நிதீஷ்குமார் கடுப்படிச்சாரே... அவரிடம் எதுவும் பேசாம, பிரதமரை மட்டும் வம்புக்கு இழுப்பது முறையா என்ற, 'டவுட்' வருதே!கிராமத்து பெண்களிடம், தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி: என்னை பற்றி யு டியூப், வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் உரிமைக்காக பேசிய வீடியோக்கள் நிறைய உள்ளன. சாமி கும்பிடுவதை பற்றி அதில் சொல்லி இருக்கிறேன்.டவுட் தனபாலு: சரியா போச்சு... காடு, கழினிக்கு வேலைக்கு போயிட்டு வர்ற கிராமத்து பெண்களிடம் போய், சோஷியல் மீடியாக்கள்ல என்னை தேடி பாருங்கன்னு சொன்னா, அவங்க என்ன செய்வாங்க... உங்க அப்பா, அண்ணன், மாமனார், கணவர் எல்லாம் அரசியல்ல பிரபலமா இருக்கிறது உங்களுக்கு எந்த வகையிலும் அனுகூலமா இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sck
ஏப் 01, 2024 15:04

கடைசில உன் வீர வசனம் எல்லாம் இவ்வளவுதானா?


ஆரூர் ரங்
ஏப் 01, 2024 09:31

மதுவிலக்கு வாக்குறுதி மாதிரிதான் இந்த ராஜ்யசபா இடமும். அடுத்த ஆண்டு தகுதியுள்ள கட்சிகளுக்கு மட்டுமே MP இடம்னு சொல்லி உலக்கை நாயகனுக்கு அல்வா கொடுக்கப் போவது நிச்சயம்.


S. Gopalakrishnan
ஏப் 01, 2024 07:14

"லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிப்பதற்காக நான் ராஜ்யசபா இடம் வாங்கிக் கொண்டேன்" - புத்தி ஜீவி !


தாசு
ஏப் 01, 2024 06:49

கமலு இப்போ குடிகொண்டிருப்பது ஸ்டாலினோட “மையத்தில்” அவரு 2025 ராஜ்யசபா தேர்தல் வரை அங்கே பிடித்துக்கொண்டு இருப்பார் !!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை