உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்றி தலை, காவி உடையுடன் தியானம்: நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்

பன்றி தலை, காவி உடையுடன் தியானம்: நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்

சென்னை : ''அரசியல் அழுத்தம் காரணமாக, பிரதமர் மோடியை அவதுாறாக சித்தரித்து படம் வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்,'' என, பா.ஜ., சமூக ஊடகப் பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் கூறினார்.அவர் கூறியதாவது: பத்திரிகையாளர் என்ற போர்வையில் வலம் வரும், 'வலைப்பேச்சு பிஸ்மி' என, அழைக்கப்படும் நபர், யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவர் சமூக வலைதளமான, 'எக்ஸ்' தளத்தில், பன்றி தலையுடன் காவி உடை அணிந்த ஒருவர் தியானம் செய்வது போல, பிரதமர் மோடி குறித்து மிகவும் கேவலமாக சித்தரித்து படம் வெளியிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு படத்தையும் அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்து வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட, 66 இடங்களில் புகார் அளித்துள்ளோம். எங்கள் புகாரை பெற்றுக்கொள்ளும் போலீசார், 'ஓ... பிரதமரையே அருவருப்பாக சித்தரித்து வெளியிட்டுள்ளாரா; அதற்கான லிங்க் அனுப்புங்கள். 'உங்கள் புகார் குறித்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்கிறோம்' என்கின்றனர்.அரசியல் அழுத்தம் காரணமாக, போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால், வலைப்பேச்சு பிஸ்மி போன்றோர் மீது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கின்றனர். எங்கள் புகார் மீது, சி.எஸ்.ஆர்., எனும் மனு ஏற்பு ரசீதுவோ, எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையோ பதிவு செய்து கொடுக்கவில்லை. போலீசார் இதேபோல தொடர்ந்து செயல்பட்டால், என்ன செய்வது என, தலைமையிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Rajah
ஜூன் 06, 2024 13:49

காவல் துறை நடவடிக்கை எடுக்க தயங்கினால் அங்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது என்று அர்த்தம். பிஜேபியை குற்றம் சாட்டும் இவர்கள்தான் உண்மையான கூட்டு சர்வாதிகாரிகள்.


kumarkv
ஜூன் 06, 2024 12:54

இவர்களுக்கு கடவுள்


konanki
ஜூன் 06, 2024 05:12

கோபிநாத் சூதனமாக இருங்க.புகார் குடுத்த உங்களை கைது செய்ய வாய்ப்பு அதிகம்.


konanki
ஜூன் 06, 2024 05:09

அவருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் பன்றி கறி ஆன்லைன் ஆர்டர் போட்டு மகிழ்ச்சியுடன் குடுங்க கோபிநாத். விருப்பமுடன் உண்பார்கள்.அதை ஊட்டு போலீஸ் கம்பெளையிண்ட் என்று ஏன்? அன்பே சிவம்


konanki
ஜூன் 06, 2024 05:05

பிஸ்மிக்கு அண்ணா விருது/கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கௌரவிக்கும்


Vijayakumar Srinivasan
ஜூன் 05, 2024 20:49

தமிழகத்தில் இதுமாதிரி போடுவது.. மற்றும் பேசுவது எல்லாம் சகஜம்தான். நம் தரம் எல்லோர்க்கும் தெரியும்.


kumarkv
ஜூன் 05, 2024 17:37

அவன் மதத்திற்கு புனித தெய்வம் அது


Sudhakar Sundaram
ஜூன் 05, 2024 14:44

ஒருவேளை பிஸ்மி நிறுவன தலைவருக்கும், அந்த நிறுவனத்தில் பனி புரிபவருக்கும் .. பன்றி மிகவும் பிடிக்குமோ? அவரது இல்லத்தில் அவர் பன்றி அதிகம் பயன் படுத்துவாரோ? . ஏனெனில் ஒருவர் எப்போதும் தனக்கு பிடித்ததை எப்போதும் நியாபகத்தில் வைத்துக்கொள்வார் ..


skv srinivasankrishnaveni
ஜூன் 05, 2024 14:32

இவனெல்லாம் பெயரைப்பார்த்தாலே தெரியுது யாரென்று .ப்ளீஸ் சொல்லுங்க வராஹம் என்றால் பன்றி வராஹமுகத்துடனே அவதாரம் எடுத்தவர் பெருமாளேதான் வராஹமுளர்த்தியென்று கும்பிடுறோம் வாராஹிஎன்ரு அம்மனாகவும் கும்பிடுறோம் இய்யாக சந்நிதி இருக்கே தஞ்சைப்பெரிய கோயில் லே வராஹி அம்மனுக்கு முதல்ல சந்நிதியே இருக்கே, பலகோடீபக்தர்கள் கும்பிடுறாங்க திருப்பதிலேயும் வராக ஸ்வாமிக்கு தனியா சந்நிதியே இருக்கே நம்ம இந்துக்களுக்கு மெய்யாலுமே பக்தி நெறைய உண்டு, வெளிநாட்டுலேயோ எல்லாத்தையும் துன்றதுகள் சுத்த அசைவம் துண்ணுவோம்னு பீத்தபெருமையா பேசுறவாலும் இருக்காங்களே


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 02:46

போலீயை சொல்லி பயனில்லை, எவ்வளவு கேவல படுத்தினாலும் சுரணை இல்லாத இந்துக்கள் மறுபடியும் வோட்டை போடுகிறார்களே.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை