உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னர் என நினைத்து செயல்படும் தர்மேந்திர பிரதான்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மன்னர் என நினைத்து செயல்படும் தர்மேந்திர பிரதான்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., எம்.பி.,க்களுக்கும் கடும் விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் பேசியது, வேதனை அளித்ததாக தி.மு.க., எம்.பி., கனிமொழி புகார் கூறினார். இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள், தமிழக எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல.நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 99 )

C.SRIRAM
மார் 17, 2025 16:32

ஒரு மண்ணைக்கட்டியும் தெரியாமல் தன்னை பெரிய டொப்பாவாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர் . பொய் புனை சுருட்டின் உறைவிடம் . அனுப்பிய கடிதத்தை காட்டிவிட்டாரே இன்னும் என்ன நடிப்பு ?


Ramesh.M
மார் 16, 2025 21:42

அட இன்னுமா இந்த ஊரு உங்கள நம்புது ???? மன்னர் ஆட்சி பற்றி நீ பேசுறியா? உலகத்துக்கே தெரியும் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இன்னும் மன்னராட்சி நடக்குது என்று . உன் அப்பனுக்கு பிறகு நீ. உனக்கு பிறகு உன் மகன், உன் மகனுக்கு பிறகு உனது பேரன், அதற்கு பிறகு கொள்ளு பேரன்.... என்னமோ. டாஸ்மாக் இருக்கிற வரைக்கும் உங்க காட்டுல மழை தான் போங்க.. எவனையும் யோசிக்க விடாமல் உருட்டுறீங்க பாருங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சி... ஹிஹிஹிஹி


Bhakt
மார் 15, 2025 15:12

நீங்கள் தான் மன்னர் என்று நினைப்பில் உங்கள் வாரிசுக்கு இளவரசர் மகுடம் சூட்டி உள்ளீர்கள்


S.V.Srinivasan
மார் 11, 2025 11:12

உங்கள் பேச்சும், செயல்பாடு மட்டும் என்ன கிழிக்குது? அதுவும் அப்படிதான் இருக்கு. உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. அப்படித்தானே முக்கிய மந்திரி அவர்களே.


vijai hindu
மார் 11, 2025 10:57

மன்னர்


Srikanth Kalamegam
மார் 11, 2025 06:10

இங்கு தான் மன்னர் ஆட்சி, நீ, உன் அப்பா, உன் மகன், பேரன்.....


Kasimani Baskaran
மார் 11, 2025 03:58

மும்மொழி என்பதை ஹிந்தி திணிப்பு என்று உருட்டுவது யார் என்று உலகம் அறியும்.


vijai hindu
மார் 10, 2025 22:37

உங்களுக்கே தெரியலையா நீங்க மன்னர் ஆட்சி தமிழ்நாட்டில் நடத்துவது


Sankar Ramu
மார் 10, 2025 22:15

மன்னரா? யார் அது ? கருணாநிதி மவன் முடி சூட்டி பிறகு அவன் மவன் முடி சூட்டுவது மன்னராட்சி இல்லையா?


Murugesan
மார் 10, 2025 21:57

நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரமாக அழைத்து கொள்கிறான் , கேடுகெட்ட அயோக்கிய திராவிட ஊழல் குடும்ப சுயநலவாதிகளுக்கு


சமீபத்திய செய்தி