உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10,000 கோடி தந்தாலும் மாணவர்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை வராது: தினகரன் குற்றச்சாட்டு

ரூ.10,000 கோடி தந்தாலும் மாணவர்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை வராது: தினகரன் குற்றச்சாட்டு

ராமநாதபுரம் : 'மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை வரவிடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதை காட்டுகிறது ''என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டினார்.ராமநாதபுரத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜெ., கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை திராவிட மாடல் அரசு முடக்கிவிட்டது. 4 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை. மாணவர்கள் விரும்பும் 3வது மொழியை கற்று அறிவை வளர்க்க வழிவகை செய்கிறது. அதற்கு ரூ.10ஆயிரம் கோடி மத்திய அரசு தந்தாலும் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் வர விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளது தமிழக மாணவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை ஆளுங்கட்சி ஆதரவுடன் தினமும் நடக்கிறது.முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கிறார்.இதனால் தி.மு.க., குடும்ப கட்சி வளர்கிறது. பிரதமர் மோடி ஆட்சியில் மதக்கலவரங்கள் நடக்கவில்லை. அவர்களது நல்ல திட்டங்களை தி.மு.க., அரசு மூடி மறைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி அங்கு சென்றதால் பிரச்னை ஏற்பட்டது.தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரத்தை துாண்டிவிட்டு அரசியல் செய்ய நினைக்கின்றனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Thamizh Selvan
பிப் 28, 2025 13:21

மண்ணை மாபியா கும்பல் மாணவர் நலன் பற்றி பேசுவது பெரிய வேடிக்கை


muthu
பிப் 26, 2025 02:11

Instead of forcing state govt to implement hindi, let centre gives job to tamils and teach hindi . Morning hours hindi learning and evening job


தமிழன்
பிப் 25, 2025 15:17

நீயெல்லாம் இதில் வாய் திறக்க உனக்கு வக்கு அறுகதையே கிடையாது 2 இலைக்காக திகாரில் உள்ளே கழி தின்னது மறந்திருச்சா?? மன்னார்குடி மாங்கா மடையா எச்ச சோத்துக்காக கண்டவன் நிழலில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுக்கும் நீயெல்லாம் பேசவே கூடாது 2 பேரும் திருடனுகதான் என்ன நீ திருடன் நம்பர் 2 அவ்வளவுதான் வித்தியாசம்


Minimole P C
பிப் 26, 2025 07:54

Yes. Stalin is very honest even more than Kamarajar and Kakkan.


baala
பிப் 25, 2025 11:50

இதை கொள்ளை அடித்த உங்கள் குடும்பத்தினர் சொல்லுவதுதான் வேடிக்கை


Bharathi
பிப் 25, 2025 11:49

Of course DMK is a dangerous to the society but ADMK not less than them in terms of spoiling our society. Who the hell are you and Sasikala how did you guys grown in politicis


Tamil Inban
பிப் 25, 2025 11:12

உனக்கு சிங்கப்பூர்ல 16 தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு இருக்கு, அதனோட வாடகையெல்லாம் நான்தான் வசூல் செய்து அனுப்போறென்னு சொல்கிறார். அதெல்லாம் வேர்வ சிந்தி நீ சம்பாதித்தியா


SRITHAR MADHAVAN
பிப் 25, 2025 10:51

பத்தாயிரம் கோடி யாருக்கு?


S.V.Srinivasan
பிப் 25, 2025 10:38

அதைத்தான் அவரே சொல்லிவிட்டாரே . 10000 கோடி வாங்கிக்குவாரு. ஆனா மும்மொழி திட்டத்தை அமல் ப டுத்த மாட்டாரு.


Sampath Kumar
பிப் 25, 2025 10:11

உனக்கும் உன் உறவு சசிக்கும்1 லச்சம் கோடி குடுத்தாலும் நீயும் இதை பண்ண மாட்ட போவியா


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 09:25

திருட்டுக் கும்பல்


Amar Akbar Antony
பிப் 25, 2025 12:56

மன்னர் குடும்பத்தை விடவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை