உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழாயடி சண்டையில் தி.மு.க., - பா.ஜ., அ.தி.மு.க., கிண்டல்

குழாயடி சண்டையில் தி.மு.க., - பா.ஜ., அ.தி.மு.க., கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ''கல்வி நிதி விஷயத்தில் தி.மு.க., - பா.ஜ.,வினர் குழாயடி சண்டை போட்டு வருகிறார்கள்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.அவர் கூறியதாவது: நான்கு ஆண்டுகள் தி.மு.க., அரசு என்ன செய்தது. ஒரு மருத்துவக் கல்லுாரியை கூட பெற்றுத்தர முடியவில்லை. மத்திய அரசிடம் மாணவர்கள் நிதியை கூட பெற்று தர முடியாத அரசாக தி.மு.க., உள்ளது.கல்வி நிதி விஷயத்தில் தி.மு.க., - பா.ஜ.,வினர் குழாயடி சண்டை போட்டு வருகிறார்கள். கல்வி நிதியைப் பெற்றுத் தர முடியவில்லை. ஆனால் 'அண்ணா சாலைக்கு வா, இங்கே வா அங்கே வா' என துணை முதல்வர் உதயநிதி அரைவேக்காடு தனமாக தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்.தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்த 39 எம்.பி.,க்களால் மாணவர்கள் கல்விநிதியை பெற்றுத்தர முடியவில்லை. அவர்கள் ராஜினாமா செய்ய தயார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா. பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தாமல் ஸ்டாலின் கண்ணீர் கடிதம் எழுதுவது யாரை ஏமாற்ற. நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றனர். இப்போது என்ன ஆனது.அ.தி.மு.க., ஆட்சியில் 8 ஆண்டுகள் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. சொத்து வரியை உயர்த்தவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் நாங்கள் உயர்த்தாத மின் கட்டணத்துக்கு ஆர்ப்பாட்டம் செய்தார். தற்போது தனது ஆட்சியில் 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார். சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

panneer selvam
பிப் 22, 2025 16:35

Leave those parties , what is your stand on educational policy ? Still you want to keep outdated two language formula confined to government schools only while private schools are three language tem


saiprakash
பிப் 22, 2025 12:39

து நீ எல்லாம் ஒரு மனுஷனா சீ ,மானங்கெட்டவனே


Uuu
பிப் 22, 2025 11:47

வெத்துவேட்டு அதிமுக


RAAJ68
பிப் 22, 2025 11:44

உங்கள் லிஸ்ட் பெரியதாக இபிஎஸ் ஓபிஎஸ் தினகரன் சசிகலா செங்கோட்டையன் இப்படி நீண்டு கொண்டே போகிறது. அதை முதலில் சரி செய்யுங்கள். எப்படியோ அண்ணா திமுக என்ற கட்சிக்கு சமாதி கட்டி விட்டீர்கள்... 2026 இல் பெரிய முட்டை காத்திருக்கிறது. பொரித்து சாப்பிடவும். திமுக 234 இடங்களிலும் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை செய்யப் போகிறது.


murugan
பிப் 22, 2025 10:40

மிகவும் நல்லது. இப்படியே நீங்கள் அமைதியாக இருந்துகொள்ளுங்கள் அதுதான் பிஜேபி வளர்வதற்கு உதவியாக இருக்கும்.


Venkateswaran Rajaram
பிப் 22, 2025 10:18

இது ஒரு ஒதுக்கித்தள்ளவேண்டிய ஜென்மம்


தமிழ்
பிப் 22, 2025 10:08

அப்ப, இப்ப நடக்கிற செங்கோட்டையன் விவகாரம் மற்றும் கொங்கு மற்றும் தென்மாவட்ட அதிகார மோதல், இது எல்லாம் என்ன சன்டைங்கோ?


Mani Iyer
பிப் 22, 2025 08:27

உங்களுக்கு என்ன? நீங்க பாட்டுக்கு மிக்ஸர் சாப்பிட்டுட்டு இருங்க.. எதிர்கட்சியா நீங்க செய்யவேண்டியதை பாஜக பண்றாங்க.


GMM
பிப் 22, 2025 08:12

மத்திய அரசின் கல்வி நிதி தமிழகத்தில் தற்காலிகமாக /நிரந்தரமாக வாழும் அனைத்து மாநில மக்கள் தாய் மொழி கல்வி பயில தான். இந்த நிதியை இஷ்டம் போல் செலவு செய்ய திமுக விரும்பி 3 கொள்கை எதிர்ப்பு என்று தொடர்பு இல்லாத வதந்தியை பரப்புகிறது. திமுகவிற்கு கொஞ்சம் புரிகிறது. அண்ணா திமுக ஒன்றும் புரியாமல் குழாயடி சண்டை என்கிறது. கனவிலும் அண்ணா திமுக கூட்டணி இல்லாமல் டெபாசிட் வாங்க முடியாது.


vijai hindu
பிப் 22, 2025 08:04

பங்காளி திட்டினால் கோபம் வருதா வர எலக்சன்ல இடம் தெரியாத போக போறீங்க


முக்கிய வீடியோ