உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு அதிகார துஷ்பிரயோகம்

தி.மு.க., அரசு அதிகார துஷ்பிரயோகம்

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும், காணொலிகளும் அதிர்ச்சி அளிக்கின்றன. பூர்வகுடி மக்களின் உடைமைகள், கூரையை பிரித்து எறிந்து, பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் வெளியேற்றி உள்ளனர். வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்தி தராமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் தி.மு.க., அரசின் அடக்கு முறைக்கு, வன்மையான கண்டனங்கள்.இவ்வாறு கூறிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி