உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை கண்டு தி.மு.க.,வுக்கு பயம்: குண்டு போடும் மாஜி ஜெயகுமார்

விஜயை கண்டு தி.மு.க.,வுக்கு பயம்: குண்டு போடும் மாஜி ஜெயகுமார்

சென்னை: ''தமிழகத்தில் காபந்து அரசு நடக்கிறது. நடிகர் விஜயை கண்டு தி.மு.க., பயப்படுகிறது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

'பார்முலா - 4' கார் பந்தயத்தை சென்னைக்கு வெளியே நடத்தி இருக்கலாம். சென்னையில் நடத்தியதால், அனைத்து அரசு துறைகளும், ஒன்றரை மாதங்களாக, பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாமல், கார் பந்தயத்தில் கவனம் செலுத்தினர்.அதாவது, 10,000 பேர் மகிழ்ச்சிக்காக, 10 லட்சம் பேரை சிரமத்திற்கு உள்ளாக்கினர்.காவிரியில் அணை கட்டுவது குறித்து, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் இங்கு வந்து பேசுகிறார். அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் கூற வேண்டும். அவர், துணை முதல்வர் பதவி கிடைக்காத கோபத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளார். முதல்வர் இல்லை; மூத்த அமைச்சர் இல்லை; தமிழகத்தில் காபந்து அரசு நடக்கிறது. அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என சொல்வதற்குக்கூட ஆள் இல்லை. முதல்வர் அமெரிக்காவில் 'போட்டோ ஷூட்' நடத்துகிறார். டிரைவர் இல்லாத காரில் செல்கிறார். இங்கு, தாசில்தார்கள் காரை தள்ளிக் கொண்டு செல்கின்றனர். இது, தள்ளுவண்டி அரசாக உள்ளது.தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க., கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்தான். முருகன் மாநாடு நடத்தியது கம்யூனிஸ்டுகளுக்கு பிடிக்கவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறிவிட்டு, பா.ஜ.,வை திருப்திபடுத்த, பழனியில் முருகன் மாநாடு நடத்தினர். பா.ஜ.,வுடன் கொஞ்சிக் குலாவுகின்றனர். சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படலாம் என்ற கருத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம்; மாநாடு நடத்தலாம். விஜய் கட்சி ஆரம்பித்தால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயம் வந்து விட்டது. இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nagarajan S
செப் 05, 2024 19:56

எப்பேர்ப்பட்ட மக்கள் செல்வாக்குடன் இருந்தஎம்.ஜி.ஆர்., படங்களுக்கே ஏகப்பட்ட இடையூறுகளைஏற்படுத்திய தி.மு.க.,வினர், முந்தா நாள் கட்சி துவங்கிய விஜய்யை விட்டு வைப்பாங்களா என்ன...? இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதில் தான், அவரது அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கு


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 17:26

தவெக வை காலம் இறக்கிய திமுக தவெக வுக்கு பயப்படுமா ???? இத்தினி வருசமா அரசியல்ல இருந்ததுக்கு என்ன பிரயோஜனம் ???? அது சரி .... அந்த லேட்டஸ்ட் வாரிசு ஸ்கூல் போறாப்டியா ????


MADHAVAN
செப் 04, 2024 10:00

இங்கேவந்து உலராம இரு, உன் தொகுதில மண்ணைக்கவ்வுன


ramesh
செப் 04, 2024 09:53

மைக் ஜெயக்குமார் அப்பப்ப இந்த மாதிரி ஜோக் அடிப்பது வழக்கம் .பேசியதை பார்த்தால் நேற்று இரவு கனவு கண்டு விட்டு அதை பற்றி மைக் முன்பு பேசுவது போல தெரிகிறது


சமீபத்திய செய்தி