உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் பாடம் நடத்த வேண்டாம்: தி.மு.க., பதிலடி

கவர்னர் பாடம் நடத்த வேண்டாம்: தி.மு.க., பதிலடி

சென்னை: சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு விவகாரத்தில், கவர்னருக்கும் முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் துவங்கி உள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்ற அனுப்பப்பட்டுள்ள முக்கிய மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழில், கவர்னர் ரவி குறித்த தலையங்கம் வெளியானது. அதை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டு, சட்டசபையின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கிறார். பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை' எனக் கூறியிருந்தார்.அதற்கு கவர்னர் மாளிகை அளித்த பதிலில், 'அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதல்வர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில், தன் அரசியலமைப்பு பொறுப்பை, தன் முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்க பயன்படுத்தி இருப்பது பரிதாபத்துக்குரியது' என, கூறப்பட்டுள்ளது.அதற்கு பதில் தரும் வகையில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை, அரசியல்மயமாக்கி கொண்டுள்ளார்.கவர்னர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கவர்னர் வரும் முன்பே, தமிழகம் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளது. தமிழகத்திற்கு எது சிறந்தது என, எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக, அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
பிப் 15, 2025 04:25

இன்று 9 லட்சம் கோடி தமிழக கடன் சுமை , இதனை திமுக தலைவர்கள் கட்டிவிட்டு 2026 தேர்தலை சந்திப்பார்களா என்ற கேள்வி எழ தொடங்கினால் தமிழக மக்களின் பெயரில் கடன்வாங்குவது நிறுத்தப்படும் , விழித்தேழுங்கள் தமிழர்களே விடியலை நோக்கி பயணிக்கலாம்


Bala
பிப் 15, 2025 04:20

திமுகவிற்கு எவ்வளவு பாடம் எடுத்தாலும் பிரயோஜனம் இல்லை மேதகு ஆளுநர் அவர்களே. தத்திகளுக்கு பாடம் எடுத்தா என்ன எடுக்காவிட்டால் என்ன ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை