உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவரை தாக்கிய தி.மு.க.,வினரை கைது செய்யணும்

மாணவரை தாக்கிய தி.மு.க.,வினரை கைது செய்யணும்

சென்னை: 'பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலையம் அருகில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரை, தி.மு.க.,வைச் சேர்ந்த நபரும், அவரது நண்பர்களும் கத்தியால் குத்தியும், கடுமையாக தாக்கியும், கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இது, அதிர்ச்சி அளிக்கிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விரைவில் நலம்பெற வேண்டும். தி.மு.க., அரசின் ஊழல் நிர்வாகம் காரணமாக, பழுதடைந்த சாலையில் சென்றபோது தவறி விழுந்த மாணவர், தி.மு.க.,வை விமர்சித்ததால், அக்கட்சியினர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியை விமர்சித்தால், மாணவரைக்கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, தி.மு.க.,வினர் அதிகார மமதையில் இருக்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.தி.மு.க., தொண்டர் என்ற பெயரில், இதுபோன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, சமூகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.உடனே, பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், சமூகத்துக்கு என்றுமே அச்சுறுத்தலானவர்கள் என்பதை முதல்வர் உணர்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஆக 15, 2024 17:50

தி.மு.க., தொண்டர் என்ற பெயரில், இதுபோன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, .... போலீஸ்கார் ... போலீஸ்கார் .... நம்ம அஞ்சலை யாரு சமூக சேவகியா ????


MADHAVAN
ஆக 15, 2024 12:31

அந்த மானவன் செய்த செயல் அப்படி, அந்த மாணவனை பலமுறை எச்சரித்தும் அருகில் உள்ள பள்ளில படிக்கும் மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளான், இது உனக்கு தெரியுமா ?


sankaranarayanan
ஆக 15, 2024 09:29

இது விரைவில் பங்களாதேஷ் மேற்கு வங்கம் போன்றவைகள்போல மாறாமல் பார்த்துக்கொள்ளவும்


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 09:27

சர்வாதிகாரி ஆட்சியில் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று இப்போ புரியுது ஸ்டாலின் சார் , எவ்ளோ நாள் தான் ஆடுவீங்க , தேர்தல் வந்தால் உதவ பிரஷாந்த் கிஷோரும் , செந்தில் ம் இருக்காங்க தமிழர்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டுக்களை இந்த சர்வாதிகாரிக்கு வாங்கி தந்திடுவாங்க ,


Prem
ஆக 15, 2024 08:48

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மல்ரோசாபுரம் சாலையில், பள்ளம் வெட்டி ஆங்காங்கே குழியாக உள்ளது. இது தினமலர் நடவடிக்கை மூலம் சரி செய்யப்படுமா?


Senthoora
ஆக 15, 2024 08:20

நீங்க எல்லாம் எப்போ திருந்துவீங்க, ஒரு குற்றம் அடைந்தாள் உடனே திராவிடம், திமுக, சங்கிகள், மூக்கர்கள், சீமான் இப்படி சொல்லி சோழிய முடிப்பிங்க, பாதிக்கப்பட்டவன், பாதிக்கப்பட்டவன்தான்.


raja
ஆக 15, 2024 06:47

பார்த்து டிப்ஸ் சார், இப்படி கருத்து சொன்னா கொலை வெறி தாக்குதல் நடத்துன உடன் பிறப்பு மேல குண்டாஸ் பாயாது.. உங்க மேலதான் பாயும்.. என்னா திருட்டு திமுகவின் வரலாறு அப்படி...


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி