உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் மார்ச் 12ல் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்

தமிழகம் முழுவதும் மார்ச் 12ல் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ., அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழு வை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர்க் கழக நிர்வாகிகள் கழக அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

vijai hindu
மார் 11, 2025 08:59

பிரியாணி குவாட்டர் ரெடி


orange தமிழன்
மார் 10, 2025 21:11

தமிழக மக்கள் நாசமாக போகட்டும்....என்று கங்கணம் கட்டி கொண்டு ஆட்சி புரியும் தீயமுக வெகு விரைவில் ஒழிக்க படுவார்கள்....


பாரத புதல்வன்
மார் 10, 2025 19:23

தமிழகம் முழுவதும் தீ மு க வை கண்டித்து தி மு க போராட்டம்.போதையில் நடக்கும் போராட்டம்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 10, 2025 13:22

போராட்டத்துக்கு இதுதான் காரணம் "மது ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி சப்ளை அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு அம்பலம்"


vijai hindu
மார் 10, 2025 13:16

நாசமா போன ஆட்சி


Ramesh Sargam
மார் 10, 2025 13:11

மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை உள்ள அரசு இதுபோன்ற வெட்டி போராட்டங்களை, பொதுக்கூட்டங்களை நடத்துவதை நிறுத்தவேண்டும்.


Barakat Ali
மார் 10, 2025 12:59

ஊழலை வெளிப்படுத்தும் அமலாக்கத்துறைக்கு எதிராகப் போராட முடியாதுங்களே ????


sethu
மார் 10, 2025 12:10

ஓங்கோல் வந்தேறி பயனெல்லாம் சொல்லி கல்வியில் சிறந்த தமிழன் அடிபணிகிறான் என்றால் தமிழும் இந்த உலகம் அழியப்போகிறது என்றுதான் அர்த்தம் .


vbs manian
மார் 10, 2025 11:59

இதற்கு எல்லாவிதமான அனுமதியும் இப்போதே ரெடி.


V K
மார் 10, 2025 11:49

இந்த தத்தி எதற்கு ஆட்சி செய்கிறது என்று தெரியவில்லை ம் எம் எல் ஏ எம் பி எல்லாம் இவனுங்க ஆளுங்க