உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயலாகும்: கிருஷ்ணசாமி

தி.மு.க., மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயலாகும்: கிருஷ்ணசாமி

விருதுநகர் : ''தி.மு.க.,வின் மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயல்,'' என, விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த இட ஒதுக்கீடு மீட்புக்கருத்தரங்கம், நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மாஞ்சோலை தேயிலை கம்பெனி மூடப்படுவதற்காக அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டம் நடத்தப்படும். தேசிய அளவில் உருவாக்கப்படும் கல்வி கொள்கையின் அடிப்படையில் தான் மாநில அரசின் கல்விக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்.மும்மொழி என்பதை ஏழை மக்களின் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என கூறுவது எந்த வகையில் நியாயம். ஹிந்தியை யாரும் திணிப்பதில்லை. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். அதற்கு பின் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஹிந்தி கிடையாது.ஒரு காலத்தில் மொழியை வைத்து அரசியல் செய்வது தி.மு.க.,விற்கு சில வாய்ப்புகளை கொடுத்திருக்கலாம். ஆனால் 21ம் நுாற்றாண்டில் ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் உருவாகிய காலகட்டத்தில் பல மொழிகளை கற்றுக்கொண்டால் தான் வாய்ப்புகள் உருவாகும். ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு, லத்தீன், ரஷ்யா மொழிகளை கற்றுக்கொண்டால் வேலை வாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் முன்னேற முடியும். தமிழக ஏழை குழந்தைகள் ஹிந்தியை கற்றுக்கொள்வதால் முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் என்ன கஷ்டம் வரப் போகிறது. மேலும் நாங்களும் திராவிடப்பாதையில் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஜால்ரா தட்டுகிறார்.தி.மு.க., கையில் எடுக்கும் மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயல். மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் தமிழக மாணவர்களின் பங்கு குறைவதற்கு மாநில அரசின் தவறான மொழிக்கொள்கையே காரணம்.விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் கனிம வளக்கொள்ளை நடந்து வருகிறது. பட்டாசு விபத்துகளை தடுப்பதற்கு தீர்வுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வின் பித்தலாட்டம்

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: செய்ய முடியாதைவைகளை மட்டுமே வாக்குறுதியாக தி.மு.க., வழங்கியுள்ளது. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் நிறுத்தி விடுவோம் என்றார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவோம் என்றார்கள். நாடு முழுவதும் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி செய்ய முடியாதவைகளை சொல்வது தான் தி.மு.க., வின் பித்தலாட்டம்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையோரப்பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. ஆளும் கட்சியினர் ஆதரவுடன் நடப்பதாக தகவல்கள் வருகிறது. மத்திய அரசின் உளவுத்துறையினர் தனிப்படை அமைத்து கடத்தலை தடுக்காவிட்டால் தேச விரோத செயல்கள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kanns
பிப் 25, 2025 11:49

Very True. 03Language Regional/National /International is MUST . Only Divisive, Destructive & VestedSelfish Idiotic Mentals Oppose these Mentals dont Oppose Foreign Arabic Urdu etc


Palanisamy T
பிப் 25, 2025 11:17

1. இந்திமொழி சமஸ்க்ருத மொழி இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த மொழிகள். இந்த மொழிகளின் வேர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு வந்தவைகள். இந்தோ ஆரிய மொழியினத்தைச் சேர்ந்த மொழிகள். இந்தி மொழி இந்திய நாட்டிற்கு தொடர்பில்லாத மொழி யென்பது சமீப ஆய்வில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வரலாற்றையே மாற்றியெழுத வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்திமொழி வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு நிறைய ஒதுக்கீடு கொடுக்கின்றார்கள். இதெல்லாம் மாநில அரசுகளின் வருவாய்கள்தானே. இதற்குமேல் சொல்வதற்கு எதுவுமில்லை. தமிழர்கள் தங்கள் மொழிக்காக போராடுகின்றார்கள் தவறில்லையே. இனிமேல் நீங்களாக எல்லாவற்றையும் ஊகித்துக் கொள்ளுங்கள்


S Ramkumar
பிப் 25, 2025 13:14

அப்ப ஆங்கிலம் எதற்கு.


srinivasan
பிப் 25, 2025 15:45

தேசிய கல்விக் கொள்கையில் 3வது மொழியாக இந்தி உட்பட என்று மட்டுமே உள்ளது அதைத் தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் தான் இந்தித் திணிப்பு. எந்த மொழியையும் படிக்கலாம் என்றால் அந்த வசதியை ஏழை மாணவர்களுக்கு கொடுக்காமல் வஞ்சிப்பது என்ன நியாயம். திமுக பள்ளிகளில் மட்டும் பணம் வாங்கிக் கொண்டு எல்லா மொழியையும் சொல்லிக் கொடுக்கலாம் ஏழைகள் பிடிக்கக் கூடாது என்பது தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம். கெட் அவுட் ஸ்டாலின்


Mani . V
பிப் 25, 2025 10:49

தெரிஞ்சு போச்சா?, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?.


Muralidharan raghavan
பிப் 25, 2025 10:33

அது முக்கியமல்ல. அவர் கூறும் கருத்துதான் முக்கியம். எத்தனை நாள்தான் இந்தி திணிப்பு என்று ஏமாற்றுவார்கள். எனக்கும்தான் இந்தி தெரியாது. ஆனால் என் மனைவிக்கும் மகளுக்கும் இந்தி தெரியும். அவர்கள் தனியார் பள்ளியில் படித்தவர்கள். நான் அரசு பள்ளியில் படித்தததால் அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.


vbs manian
பிப் 25, 2025 09:14

இல்லாத ஹிந்தி திணிப்பு என்று எத்தனை காலம் மக்களை ஏ மாற்றுவர். நாகரிக வாழ்க்கையின் கரும்புள்ளி. மாற்றான் தோட்ட மல்லிகைக்கு மனம் உண்டு என்று சொன்னவர்கள். பறக்க வேண்டியவர்கள் குழி தோண்டி பாதாளத்தில் பாய்கிறார்கள்.


sankaranarayanan
பிப் 25, 2025 08:53

நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் நிறுத்தி விடுவோம் என்றார்கள். ஆனால் அப்படி கூறியவர்கள் தலையெழுத்து சரியாகவே இல்லையே என்ன செய்வது எழுத்துக்கு எழுத்துப்பதில் கொடுக்கப்பட்டுவிட்டது


சுரேஷ்சிங்
பிப் 25, 2025 08:32

முதல்ல உனக்கு இந்தி தெரியுமா?


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 10:04

ஹிந்தி தெரிந்தால்தான் ஹிந்தியை ஆதரிக்கணும் ன்னு யார் சொன்னது ?


Barakat Ali
பிப் 25, 2025 10:39

ஒரு மொழியைத் தெரிஞ்சுக்கிட்டா ஆதரிக்கிறாங்க அல்லது எதிர்க்கிறாங்க ????


Barakat Ali
பிப் 25, 2025 10:39

சிங் உங்க தந்தையார் பெயரா ????


S.V.Srinivasan
பிப் 25, 2025 07:20

சார் தி மு க 60 வருஷமா இப்படித்தானே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மொழி கொள்கையில் மட்டுமல்லஅனைத்திலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் திருந்த வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 25, 2025 06:54

வெள்ளைக்காரன் கட்டிக்கொடுத்த புளியோதரைதான் திராவிடம் என்ற பித்தலாட்டம். அதை வைத்து பலர் இன்னும் தங்களையும், தான் சார்ந்தவர்களையும் முன்னேற்றிக்கொண்டு அதற்கு தமிழன் அடிமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். திராவிடர்களே தமிழகத்துக்கு வந்தேறிகள் - ஆனால் அதை மறைக்க இங்குள்ள பல ஜாதியை சேர்ந்தவர்களை திசை திருப்பி பிராமணர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற ஒரு கேவல கோட்ப்பாடுகளை வைத்து கண்டமேனிக்கு ஆடித்திரிகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்வது புதிதல்ல. கூலிக்கு ஆள் பிடித்து அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை