உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடங்க மாட்றாங்கய்யா... வேலை செய்ய லஞ்சம் அரசு அதிகாரிகள் கைது

அடங்க மாட்றாங்கய்யா... வேலை செய்ய லஞ்சம் அரசு அதிகாரிகள் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி விளாத்திக்குளம் சாலையம் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 50. இவர் நிலத்துக்கு பட்டா கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். 4,000 ரூபாய் வேண்டும் என சர்வேயர் செல்வமாடசாமி கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவலிங்கம், துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். நேற்று மதியம் விளாத்திக்குளம் அருகே சர்வேயர் செல்வமாடசாமியிடம் போலீசார் கொடுத்திருந்த ரசாயனம் தடவிய பணத்தை சிவலிங்கம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வமாடசாமியை கைது செய்து விசாரித்தனர்.திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ், 64. இவரது பூர்வீக இடத்திற்கான சொத்து வரியை, தந்தை பெயரில் இருந்து இவர் பெயருக்கு மாற்ற விண்ணப்பித்தார். நேரில் வருமாறு, திருவண்ணாமலை ஆர்.ஐ., செல்வராணி, மொபைல் போனில் அழைத்தார். அலுவலகம் சென்ற ரமேஷிடம், ஆர்.ஐ., செல்வராணி மற்றும் உதவியாளர் ராகுல், 30,000 ரூபாயை நேற்று பெற்றனர். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் கமலா, 50, வாரிசு சான்றிதழ் கேட்டு, நல்லுாரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வருவாய் ஆய்வாளர் மைதிலியை, 45, அணுகினார். சான்றிதழ் வழங்க, அந்த பெண் அதிகாரி 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதிர்ச்சியடைந்த ஜீவா, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மதியம் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம், 2,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், மைதிலியை கைது செய்து அவரிடம் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

tmranganathan
ஜூன் 02, 2024 18:37

thimukathaan oozhalai aarambithu47 aandugalaaha vistharichadhu. dravidal yenbadhu oozhalai paravaseyvadhu.


Thaimozhi Selvan
ஜூன் 02, 2024 08:06

என்னைக்கு யூனிஃபார்ம் கை நீட்டவில்லை என்றால் அன்றே எல்லாம் மாறிவிடும்


Sampath Kumar
ஜூன் 01, 2024 11:35

ஆட்சி வந்தாலும் இந்த காட்சி உண்டு என்ன செய்ய ? லஞ்சத்தை ஒலிபூம் என்று சொல்லி வோட் வாங்கும் கூட்டமே லஞ்சத்தில் ஊறி திளைக்கும் பொது இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் சரியான சனி பிடித்த நாடுமாகி போனது நம்ம நாடு


BASKAR A
ஜூன் 01, 2024 10:25

எல்லா ஆஃபீஸ்லயும் பைசா எக்ஸ்ட்ரா கொடுக்காம


M velmurugan
ஜூன் 01, 2024 05:04

திருந்தாத ஜென்மங்கள்


கீரன் கோவை
ஜூன் 01, 2024 01:38

தாத்தா 30 வருஷங்களில் சம்பாதித்ததை 3 வருஷங்களில் சம்பாதித்த பேரனை எப்படிக் கைது செய்வது?


R Kay
ஜூன் 01, 2024 01:34

மக்களை புழுவை விட கேவலமாக treat செய்யும் குன்றிய அரசு ஊழியர்களை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இடப்பட்ட வேலையை செய்ய கையூட்டு. லஞ்சமின்றி ஒரு வேலையும் குன்றிய அரசு அலுவகங்களில் நடக்கவே நடக்காது. மனசாட்சியில்லாத மிருகங்கள். இல்லாதவனிடமிருந்து கூட பிடுங்காமல் விடமாட்டார்கள். இழி பிறவிகள். அப்படி என்ன பேராசை?


Elango
மே 31, 2024 22:40

ஒன்றும் மாறப்போவதில்லை இவர்களைப்போல அணைத்து துறை அலுவலகங்களிலும் ஆட்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் பலமான பாதிப்பு ஏற்படும் வரை திருந்தாதவர்கள்


Dhandapani
ஜூன் 01, 2024 07:44

மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஒப்பந்தக்காரரிடம் லஞ்சமாக பணம் வாங்கி அதுபத்தாது இன்னும் கொடு என பேசும் வீடியோ எல்லா செய்திகளிலும் ஒருவாரம் படமா போட்டுக்காட்டினாங்க, அவரை அவங்க உயர் அதிகாரிகள் மக்கள் பார்வைக்கு தண்டிப்பதுபோல தண்டித்தார்கள், மக்கள் மறைந்தவுடன் அவரும் காசு கொடுக்கவேண்டிய இடத்தில கொடுத்து இப்போ பந்தாவா சென்னையில் மீண்டும் செயற்பொறியாளரா பணிமாறுதல் வழங்கி வேலைசெய்யிறார், நீதி எங்கபோச்சு சார், பயமில்லாம போச்சு சார்,


K.n. Dhasarathan
மே 31, 2024 21:13

லஞ்சம் வாங்கினால், மிக கடுமையான தண்டனைகளை, குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு, சொத்துக்களை முடக்குவதில் இருந்து, பணியில் இருந்து உடனே விடுவிப்பு, குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபிக்கும் வரை விடக்கூடாது, அப்போதுதான், மற்றவர்களுக்கு புத்தி வரும், தண்டனை கடுமையாக இல்லையெனில் குற்றங்கள் பெருகும், முக்கியமாக நீதி துறை இதை கவனத்தில் எடுத்துக்கணும் .


R Kay
ஜூன் 01, 2024 01:35

எல்லா துறையிலும் லஞ்சலாவண்யம் தலை விரித்தாடுகிறது.


Ajay Prakash
மே 31, 2024 20:25

இது தமிழ்நாட்டுல சகஜமப்பா


மேலும் செய்திகள்







புதிய வீடியோ