உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துார்தர்ஷன் லோகோ நிறம்: ஸ்டாலின் கண்டனம்

துார்தர்ஷன் லோகோ நிறம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை : 'அனைத்தையும் காவிமயமாக்கும் சதித் திட்டத்தின் முன்னோட்டமாக, துார்தர்ஷன் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது சமூக வலைதளப்பதிவு: உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசினர். தமிழகத்தின் ஆளுமைகளின் சிலைகள் மீது, காவி பெயின்ட் ஊற்றி அவமானப்படுத்தினர். வானொலி என்ற துாய தமிழ் பெயரை, ஆகாஷவாணி என சமஸ்கிருத மயமாக்கினர். தற்போது துார்தர்ஷன் லோகோவிலும் காவி கறையை அடித்திருக்கின்றனர். அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ., சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக, இந்திய மக்கள் வெகுண்டெழுவதை, 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

skv srinivasankrishnaveni
ஏப் 25, 2024 12:14

வேறு ஒன்னும் ஆம்படவில்லை இந்தாளுக்கு உதயசூரியன நிறத்தை MAARRAVENDUM


sri
ஏப் 24, 2024 19:01

தமிழக அரசின் ஆலயங்களை நிர்வகிக்கும் ஹர்&ஸ் துறையின் லோகோ இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று ஏன் புதிய லோகோ? அதற்கான தேவை என்ன? என்பதை அறிவித்துவிட்டு பின்னர் மத்திய அரசை கேள்வி கேட்கட்டும்


David DS
ஏப் 24, 2024 09:56

பேசாம காவி நிறத்துக்கு திராவிட வண்ணம்னு சட்டசபையில தீர்மானம் போட்டு பேரை மாத்துங்க அப்புறம் காவி திராவிட கலர் ஆகிடும்


Vijay
ஏப் 24, 2024 06:38

திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள்


skv srinivasankrishnaveni
ஏப் 25, 2024 12:15

KAREKTUNGKA


Vijay
ஏப் 24, 2024 06:37

உங்க கண்டனத்தை குப்பையில் கொட்டுங்க


Oru Indiyan
ஏப் 23, 2024 18:28

உங்கள் மாறனின் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் ஜெர்சி நிறம் ஆரஞ்சு தானே இந்த வருடம் தான் மாற்றினார்கள் ஆனால், ஹெல்மெட் நிறம் இன்றும் ஆரஞ்சு தான்


SIVA
ஏப் 23, 2024 16:40

டிடி கலர் மாற்றியதை கேள்வி கேக்கும் இவர் தமிழ்நாட்டின் ஹிந்து அறைநிலை துறையின் லோகோ மாற்றியது சரியா


B MAADHAVAN
ஏப் 23, 2024 16:34

தமிழகத்தை பெரியார் மண், கலைஞர் மண் என்று சொல்லி, ஊருக்கு குறைந்தது ஒரு சிலை பொது இடத்தில் வைத்து, எல்லாவற்றுக்கும் பெரியார், கலைஞர் என்று சொல்லியே நாட்டை ஏமாற்றி தமிழ்கதிற்கு விரைவில் கலைஞர் மாநிலம் என்று பெயர் சூட்ட வேண்டும் அதற்கு மத்தியில் கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்பதால் தான் தேசியப் பற்று அற்ற இவர்கள் இந்தியா என்று தற்போது கூவி வருகிறார்கள் பகுத்தறிவு பேசி, குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிறத் துண்டு அணியும் இவர்கள் எல்லா பேருந்துகளுக்கும் மஞ்சள் நிறம் கொடுக்கும் போது தெரியவில்லையா முதலில் தன் மீது உள்ள கறையை போக்க முயற்சிக்க வேண்டும்


ram
ஏப் 23, 2024 15:09

மஞ்சள் பொது இங்கு எங்கும் மஞ்சளாக மாறியதே இவர்கள் நடத்தும் குடிசை தொழில் கலரும் காவிதானே


Barakat Ali
ஏப் 23, 2024 12:30

சர்வாதிகாரி அவர்களே தூர்தர்ஷன் லோகோவில் காவி நிறம் முன்பே, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தியே இருந்த நிறம்தான்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ