உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல் ஜீவன் திட்டத்தில் 1.10 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

ஜல் ஜீவன் திட்டத்தில் 1.10 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1 கோடியே, 25 லட்சத்து, 28,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டது. கடந்தாண்டு துவங்கிய இப்பணிகளுக்கு, இரண்டு தவணைகளாக, 6,556 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.இத்திட்டத்தில் இதுவரை, 1 கோடியே, 10 லட்சத்து, 72,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 14.50 லட்சம் குடியிருப்புகளுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என, தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில், 88.38 சதவீத குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மாதந்தோறும் தலா, 30 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.தற்போது, 14.50 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்த வேண்டி உள்ளது. இதற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, டில்லி சென்று மத்திய அரசிடம் அவகாசம் நீட்டிக்க கோரிக்கை வைத்தார். அதன்படி, 2028 வரை, ஜல் ஜீவன் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள குடியிருப்புகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அம்பி ஐயர்
பிப் 26, 2025 08:30

இத் திட்டத்தில் பெருமளவில் முறைகேடுகள் தான் நடைபெற்றுவருகிறது..... இத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகச் செய்தியில் உள்ளது... ஆனால் அவை அனைத்திலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.... இதில் ஒப்பந்ததாரர்களும் ஊராட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளைய்டித்துள்ளனர். பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு பொதுமக்களிடமிருந்து அவர்களின் பங்களிப்பு வசூல் செய்யப்படவே இல்லை... இணைப்பு கொடுக்கப்பட்டு தண்ணீர் வந்தால் தானே பொதுமக்கள் பணம் கட்டுவார்கள்.... வெறு இணைப்பிற்கு மட்டும் யார் பணம் கட்டுவார்கள்.... இதற்கு ஒரு தனி டீம் அமைத்து அதுவும் நேர்மையான டீம் அமைத்து விசாரிக்க வேண்டும். முறைகேடு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்...


srinivasan
பிப் 25, 2025 15:53

இப்படி குடிநீர் இணைப்பு கொடுத்தது போல போலி இணைப்புகளை வீடியோ எடுத்துப் போட்ட ஒரு வாலிபரை சிறையில் அடைத்தது நினைவு வருகிறது. எவ்வளவு இணைப்பு ஒழுங்காக இருக்கிறது என்று அந்தப் பகுதி மக்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் மற்றும் மேலதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு கணக்கு மட்டும் காண்பிப்பார்கள். ஒதுக்கிய பணம் ஒழுங்காக உபயோகப் படுத்தப் பட்டதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 25, 2025 07:21

75 ஆண்டுகள் தமிழக அரசு தூங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சமூக நீதி பேசுவார்கள். பிளாஸ்டிக் சேர் போட்டு சமத்துவம் பேசுவார்கள். உருப்படியாக தண்ணீர் வசதி கூட செய்ய துப்பில்லாதவர்கள்.. இவர்களையும் நம்பிக்கொண்டு, முட்டுக்கொடுத்துக்கொண்டு ஒரு அடிமைப்பட்டாளம் திரிகிறது.


அப்பாவி
பிப் 25, 2025 07:09

மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான் குடிநீர்நு சொல்லிடுங்க. இல்கேன்னா ப்பீனேக்கா பானி நஹி.


xyzabc
பிப் 25, 2025 06:31

இதை எல்லாம் ஸ்டிக்கர் செய்து விடும் மாடல் அரசு.


athi
பிப் 25, 2025 05:38

வெறும் குடிநீர் இணைப்பு மட்டும் போதாது. தண்ணீர் வேண்டும். இது வரை மிக மோசமான, திட்டமிடல் இன்றி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை