உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் மாமூல் வசூலால் போலீசார் கூண்டோடு மாற்றம்: திருச்சி எஸ்.பி., அதிரடி

மணல் மாமூல் வசூலால் போலீசார் கூண்டோடு மாற்றம்: திருச்சி எஸ்.பி., அதிரடி

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் தினமும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. இதற்கு, 'நம்பர் - 1' டோல்கேட், கொள்ளிடம் போலீசார் உடந்தையாக உள்ளனர் என, நம் நாளிதழில் 21ம் தேதி டீக்கடை பெஞ்ச் பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த, திருச்சி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார். விசாரணையில், கொள்ளிடம் போலீசார் மணல் கடத்தல்காரர்களிடம் தொடர்பில் இருந்ததும், மாமூல் வாங்கி பங்கிட்டுக் கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த 23 போலீசாரில், எஸ்.ஐ., மணிகண்டன் தவிர, 22 போலீசாரை நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார். இது, திருச்சி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

அஆ
ஜூன் 23, 2024 14:07

எஸ்பி மணிகன்டன் தவிர. ஏன் என்றால் அடுத்து வருபவர்களுக்கு எவ்வளவு வசூல் செய்யனும் எவ்வளவு மேலே செலுத்தனும் என்பதை செல்லி குடுக்க


MaraN DinesH
ஜூன் 24, 2024 08:37

ஹலோ தம்பி அவர் புதிதாக வந்தவர்.. திருச்சி எஸ் பி பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அவர் மிகவும் நேர்மையானவர்


MaraN DinesH
ஜூன் 24, 2024 08:37

கேடுகெட்ட முட்டாள்தனமாக பேசாதே தம்பி


sridhar
ஜூன் 23, 2024 12:29

இன்னும் சில நாட்கள் இதுபோன்ற கண்துடைப்பு செய்திகள் வந்துகொண்டு இருக்கும். - நேற்றுவரை இந்த அக்கிரமங்கள் இந்த அதிகாரிகளுக்கு தெரியாதா . குமரி மாவட்ட மலைகள் எல்லாம் கல்லாக மாறி கேரளா சென்றுகொண்டிருக்குறது , கண்ணெதிரே நடக்கும் மணல் , கல் கொள்ளை எல்லாம் யூடுபில் வந்து கொண்டு தான் இருக்கு , போலீசுக்கு மட்டும் தான் இன்னும் தெரியல .


S. Narayanan
ஜூன் 23, 2024 11:32

இதில் எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் எதற்கு இந்த அரசுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்தத தான். அதாவது திராவிட அரசு லஞ்சம் கொள்ளை என்று அனைத்து தரப்பினருக்கும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பழக்கி விட்டது. அதனால் வேறு எந்த கட்சியை தேர்ந்து எடுத்து ஆட்சி அமைக்க முயன்றால் இவர்களுக்கு வருமானம் வாழ்நாள் முழுதும் கிடைக்காது. அதனால் யாருக்கும் மக்கள் பற்றி கவலை கிடையாது. அவர்களுக்கு அவ்வப்போது ஒரு ரொட்டி துண்டு கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது திராவிட மாடலிங் முடிவு


theruvasagan
ஜூன் 23, 2024 11:24

பங்கு பிரிப்பதில் பங்காளிகளுக்குள்ள தகராறோ.


rasaa
ஜூன் 23, 2024 11:08

அடுத்த செட் ரெடி. எல்லோரும் பயன் பெற வேண்டாமா?


Subburamu
ஜூன் 23, 2024 10:57

Transfer is not a punishment All the corrupt government staff are being transferred after exposure of receiving bribery. Such transferred staff continue their corrupt practices in the new position. Deterrent punishment alone will reduce the corruption But ruling political leaders, beaurocrates are helping such corrupt staff and using their services to amaze huge wealth against the law of the land


h
ஜூன் 23, 2024 10:37

appudi podu


S. Narayanan
ஜூன் 23, 2024 09:21

இவை எல்லாம் அரசியல்வாதி அமைச்சர் போலீஸ் இப்படி எல்லோரும் அட்டவணை போட்டு தான் செய்கிறார்கள். அதனால் இந்த அரசை ஒழித்தால் தான் இதை தடுக்க முடியும்


Minimole P C
ஜூன் 23, 2024 09:41

Please include ruled party govt also.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 09:14

ஒழுங்கா நேருமையா மேலிடத்துக்கு கப்பம் கட்டியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? சும்மா விடுவாரா?


rasaa
ஜூன் 23, 2024 11:11

"ஒழுங்கா நேருமையா" அருமை


rasaa
ஜூன் 23, 2024 11:12

அருமை, அருமை


ரன்ஜனி
ஜூன் 23, 2024 09:10

வாழ்நாளுக்கு தேவையான பணம்தான் கொள்ளையடிச்சாச்சி பின்னே என்ன. நேரா டிஸ்மிஸ் தானே சரியான சட்டம்..


Kanns
ஜூன் 23, 2024 16:52

Good & Required Actions against Police Criminals But Prosecute-Convict them for Dismissals


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி