உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ - பைலிங் முறை நீதிமன்றங்களில் தள்ளிவைப்பு

இ - பைலிங் முறை நீதிமன்றங்களில் தள்ளிவைப்பு

சென்னை:சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில், கட்டாய, 'இ - பைலிங்' முறை, மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில், கடந்த ஆண்டு செப்டம்பர், 1 முதல், 'இ - பைலிங்' முறை, அமல்படுத்தப்பட்டு வருகிறது. 'இ - கோர்ட்' சர்வர் பிரச்னை, தொழில்நுட்ப வசதி குறைபாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பிரச்னைகளால், 'இ - பைலிங்' முறையை அமல்படுத்த, வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தது.இதுதொடர்பாக, கடந்த ஏப்ரலில் தலைமை நீதிபதியை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோஷியேசன் தலைவர் எம்.பாஸ்கர், லா அசோஷியேசன் தலைவர் பி.செல்வராஜ் உள்ளிட்ட, இதர வழக்கறிஞர்களின் சங்க பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில், கட்டாய, 'இ - பைலிங்' முறையை, மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை