உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியலில் குளறுபடி; பூத் சிலிப் வழங்க திணறல்

வாக்காளர் பட்டியலில் குளறுபடி; பூத் சிலிப் வழங்க திணறல்

சென்னை : வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்க திணறி வருகின்றனர்.தமிழகத்தில் 3.06 கோடி ஆண்கள்; 3.17 கோடி பெண்கள்; 8,467 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏப்., 19ல் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படுகிறது.

முக்கிய காரணம்

ஏப்., 1 முதல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடி பெயர், முகவரி போன்ற விபரங்கள் உள்ளன.இதை ஓட்டளிக்க ஆவணமாக பயன்படுத்த முடியாது; அதேநேரம் ஓட்டளிக்கச் செல்லும் போது, அதில் உள்ள வரிசை எண், பாகம் எண் போன்ற விபரங்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் விபரத்தை சரி பார்க்க எளிதாக இருக்கும்.பூத் சிலிப் வழங்கும் பணியை வரும் 13ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பல இடங்களில், கணவன் பெயர் ஒரு இடத்திலும், மனைவி பெயர் ஒரு இடத்திலும் உள்ளன. வீட்டு எண் மாறி உள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயரை தேடி பிடிப்பது சிரமமாக உள்ளது.சென்னை போன்ற பெருநகரங்களில், அடுத்த வீட்டில் உள்ள நபர்கள் யாரென்றே தெரிவதில்லை. இதனால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் விபரத்தை அறிவதும் சிரமமாக உள்ளது. இதுவே, முழுமையாக பூத் சிலிப், வாக்காளர்களை சென்றடையாததற்கு முக்கிய காரணம்.இது குறித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை, மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்.

சிரமம்

அவர்கள் அதை சரி செய்யாமல், ஒவ்வொரு முறையும் ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலை அப்படியே அச்சிட்டு வழங்கி விடுகின்றனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றனர். எனவே, வாக்காளர் பெயரை, வாக்காளர் பட்டியலில் கண்டுபிடித்து வழங்குவது சிரமமாக உள்ளது. பொதுவாக ஒரு தெருவில் உள்ளவர்கள், அந்த தெருவில் வசிப்பவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்தால், எளிதாக கண்டுபிடிக்கிறோம்; இல்லையெனில் கடும் சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkatasubramanian krishnamurthy
ஏப் 09, 2024 12:45

வாக்காளர் பட்டியலில் ஒரு பெயரே இரு வேறு இடங்களில் இருப்பது, ஒருவரே இரு விலாசங்களில் இருப்பது, இறந்து போனவர்களை நீக்காமல் இருப்பது போன்றவைகளை தேர்தல் ஆணையம் அப்டேட் செய்வதில்லை இதில் ஆறேகால் கோடி வாக்காளர்கள் என்ற கணக்கே தவறாகத்தான் இருக்கும் இதை வைத்து வாக்களிப்போர் சதவீதம் குறைகிறது என அங்கலாய்க்கவும் செய்கிறார்கள் மேட்டூர் அணையில் நீர்மட்டத்தை தூர்வாராமல் அதிலிருக்கும் மணல் மட்டத்தையும் சேர்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது


P.Sekaran
ஏப் 09, 2024 09:46

ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண் இணைந்திருந்தால் எப்படி ஒருவருக்கு ஒரே இடத்தில் மூன்று அடையாள அட்டை கிடைக்கும் இந்த தவறு நடைபெறுகிறது வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் கம்பூயிட்ரைசேசன் புரோகிராமில் தவறு உள்ளது அதன் பிறகு விலாசத்திற்கு வருவோம்


GMM
ஏப் 08, 2024 08:59

உள்ளாட்சிகள், மாநில நிர்வாகம் தான் வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க உதவும் தேர்தல் ஆணையம் எந்த ஆய்வும் செய்யாது? தலைமை தபால் நிலையம் வழங்கும் முகவரி அட்டை மூன்று ஆண்டுகள் செல்லும் வாக்காளர் எண் மாறாமல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் புதுப்பிக்க வேண்டும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு அதே அட்டை செல்லுபடி ஆகுது பலர் இடம் பெயர்ந்து இருப்பர் தற்போது ஆன்லைன் மூலம் வாக்காளர் தகவல், தொகுதி எண், வாக்குச்சாவடி, பகுதி வரிசை எண் அறிய முடியும் இது ஓட்டு போட உதவ வேண்டும்


Premalatha
ஏப் 08, 2024 08:41

Oru professionalism illai, election commission kku...


அப்புசாமி
ஏப் 08, 2024 07:04

பத்து வருசத்துக்கு மேலே இங்கே தலைமை தேர்தல் அதிகாரியா ஒருத்தர் குப்பை கொட்டிக்கிட்டிருக்காரே...


Kalyanaraman
ஏப் 08, 2024 06:34

கைத்தொலைபேசி இல்லாதவர் மிகக்குறைவு ஆதலால், எல்லோருக்கும் க்யூ ஆர் கோடு அனுப்பி வைத்தால் அதிலிருந்து எல்லா விவரங்களையும் எடுக்க முடியும்


A. Palani
ஏப் 08, 2024 06:30

முதல் தலைமுறை வாக்காளர் இணைப்பு பட்டியலையும், அவர்களுக்கான வோட்டர் கார்டு போஸ்டேல் அனுப்பவும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ