உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதையோ மறைக்க என்கவுன்டர்: மத்திய இணை அமைச்சர் முருகன்

எதையோ மறைக்க என்கவுன்டர்: மத்திய இணை அமைச்சர் முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லியில், பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன் கூறியதாவது:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போயுள்ளதையே காட்டுகிறது.ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், போலீசாரும், மாநில அரசு நிர்வாகமும் சேர்ந்து ஏதோ ஒன்றை மறைக்க முயல்கின்றனர். காரணம், படுகொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் ரவுடிகள் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, கைவிலங்கு மாட்டித்தான் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனாலும், ஒரு ரவுடியை சுட்டுக் கொன்றுள்ளனர்.எந்த ஒரு காரணத்திற்காகவும், போலீசார் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. குற்ற சம்பவத்தை விசாரித்து நீதி வழங்க சட்டம், நீதிமன்றம் உள்ளது.சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் ரவுடி திருவேங்கடம் கையில் விலங்கு போட்டிருந்தால், அவர் எப்படி போலீசாரை நோக்கி சுட்டிருக்கவோ, தாக்கியிருக்கவோ முடியும்? ஏதோ ஒன்றை மறைக்கவே ரவுடி திருவேங்கடம் திட்டமிட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். அந்த விசாரணை நடந்தால் தான், இந்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும். எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nizam
ஜூலை 18, 2024 11:39

ஒரு பக்கம் ஆமாஸ்ட்ரோங் அஞ்சலி இன்னொரு பக்கம் இப்படி உடான்ஸ் என்னடா நடக்குது இங்கே


Senthoora
ஜூலை 16, 2024 07:04

துன்புறுத்தப்பட்டால் இப்படி எல்லாம் புலம்புவார்களா.


Sivakumar
ஜூலை 16, 2024 06:40

சொல்லாம சொல்ரிங்க. புரிஞ்சிக்கிட்டோம் பாஸ்


Kasimani Baskaran
ஜூலை 16, 2024 05:07

தீம்க்கா ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவில்லை என்றால் பொது மக்களுக்குத்தான் சிரமம். பொய்யாய் அள்ளி விட்டு நடக்கும் ஆட்சியை யாரும் விரும்பவில்லை.


Mani . V
ஜூலை 16, 2024 04:11

தெரிஞ்சுருச்சா? உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ