தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை:சென்னை கீழ்ப்பாக்கத்தில், 'ஹவுடா பேமென்ட் சொல்யூஷன்ஸ்' என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. வங்கிகளுடன் இணைந்து, நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன், ஆன்லைன் பண பரிவர்த்தனையிலும் ஈடுபட்டு வருகிறது.சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, இந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.