ஈரோடில் வெயில் சதம் நடப்பாண்டில் முதல்முறை
சென்னை : நடப்பு ஆண்டில் முதல் முறையாக, ஈரோடில் நேற்று வெயில் சதம் அடித்தது.தமிழகத்தில் பொதுவாக, ஏப்., மே, ஜூன் மாதங்களில் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது பல்வேறு நகரங்களில், வெயில், 37.6 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும். நடப்பு ஆண்டில், பிப்., மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நகரங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று மாலை வரை, பல்வேறு நகரங்களில் பதிவான வெப்பநிலை விபரங்களை, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. அதில், ஈரோடில் 37.6 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நடப்பு ஆண்டில், தமிழகத்தில் முதல் முறையாக, ஈரோடில் வெயில் சதம் அடித்துள்ளது.