உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போடி மலைக் கிராமத்தில் குடும்பங்கள் வெளியேற நோட்டீஸ்

போடி மலைக் கிராமத்தில் குடும்பங்கள் வெளியேற நோட்டீஸ்

போடி: தேனி மாவட்டம் போடி ஒன்றியம் கொட்டக்குடி ஊராட்சி சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக் கிராமத்தில் குடியிருக்கும் குடும்பங்களை வெளியேற வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.இந்த மலைக்கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 80 ஆண்டுகளாக வசிக்கின்றனர். குரங்கணியில் இருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு 25 கி.மீ., துாரம் ரோடு வசதி இல்லாத நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தளவாட பொருட்களை தலைச் சுமையாகவும், குதிரை மூலமாகவும் கொண்டு சென்று வருகின்றனர். இப்பகுதியில் காபி, எலுமிச்சை, பலா, ஏலம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. இங்கு குடியிருக்கும் மக்களுக்கு மின் வசதி, தண்ணீர் வசதி, ஆரம்பப் பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்து தரப்பட்டுள்ளன. குரங்கணியில் இருந்து முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் - ஸ்டேஷன் வழியாக டாப் ஸ்டேஷன், மூணாறுக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு வனச்சட்டம், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக் கிராமம் வனத்துறைக்கு உட்பட்டது. இப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே சட்டப்படி ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும், அகற்றாத நிலையில் உரிய தகவல்களை வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் போடி ரேஞ்சர் நாகராஜ் மூலம் குடியிருக்கும் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 80 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் கலெக்டரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை