உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் சபரிமலையில் விரிவாக்கம்

பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் சபரிமலையில் விரிவாக்கம்

சபரிமலை : மண்டல, மகர விளக்கு காலத்தில் சபரிமலை பக்தர்களுக்காக செய்யப்படும் காப்பீடு திட்டம், மாதாந்திர பூஜை காலத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக ஒரு குறிப்பிட்ட துார அளவுக்குள் நடைபெறும் விபத்துகள், மரணம் ஆகியவற்றுக்கு காப்பீடு தொகை வழங்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது. இது, மண்டல, மகர விளக்கு காலத்தில் மட்டும்அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதாந்திர பூஜை காலத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: பக்தர்கள் நலனை கருதி அவசர தேவைக்காக ஆன்லைன் முன்பதிவு முறையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு காப்பீடு வசதி அறிமுகப்படுத்துகிறது. மண்டல, மகர விளக்கு சீசனில் மட்டும் இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், மாதாந்திர பூஜை காலத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனி மாதம் நடை திறக்கும் போது, பக்தர்களுக்கான இந்த திட்டம் அமலுக்கு வரும்.இதற்காக பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். காப்பீட்டின் எல்லை அளவு விரிவுபடுத்தப்படும். மாதாந்திர பூஜை காலத்தில் தினமும், 50,000 பேருக்கும், மண்டல, மகர விளக்கு சீசனில் 80,000 பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். சுமுகமான தரிசனம் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வரிசையில் அழைத்துச் செல்லப்படுவர். அப்பம், அரவணை கவுன்டர்களில் இனி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை