உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுரண்டி பிழைக்கும் கும்பல்: அண்ணாமலை காட்டம்

சுரண்டி பிழைக்கும் கும்பல்: அண்ணாமலை காட்டம்

பல்லடம் : ''சுரண்டிப் பிழைக்கும் கும்பல், மக்களை சுரண்டி சுரண்டி கொள்ளையடித்து வருகிறது,'' என, பல்லடத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாடினார்.கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளராக களமிறங்கியுள்ள அண்ணாமலை, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பிரச்னை உள்ளது என்பது, எனக்கு தெளிவாக தெரியும்.எல்லா இடத்திலும் கொள்ளை அடிக்கின்றனர். வாக்காளர்கள் மனது வைத்தால் தான் தாமரை வெற்றி பெறும்.மாறி மாறி ஓட்டுபோட்டு உங்கள் கைரேகை தேய்ந்தது தான் மிச்சம். ஒரு முறை உங்கள் அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை மொத்தமாக மாற்றிக் காட்டுவேன்.முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., என அனைவரும் தி.மு.க., எனில் யார் கேள்வி கேட்பர்? 70 ஆண்டுகளாக சுரண்டிப் பிழைக்கும் கும்பல் உங்களை சுரண்டி கொள்ளையடித்து வருகிறது. ஏழைகளை ஏழைகளாகவே வைத்துள்ளனர்.மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை இங்குள்ள கும்பல் தடுக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; தைரியமாக கேள்வி கேட்க வேண்டும் என்றால், அண்ணாமலைக்கு ஓட்டு போடுங்கள்.அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதற்கு, 3 சென்ட் இடம் வேண்டும். இதற்கான நிலம் இல்லை என்பதால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுஉள்ளோம். பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்த எம்.பி.,க்கள் பார்லிமென்டுக்கு சென்று மவுன விரதம் இருந்து விட்டு, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது வந்துள்ளனர்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை, ஒவ்வொரு தேவை உள்ளது. அனைவரது தேவைகளையும் நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். ஒன்பது ஆண்டில் 14 அணைகளை காமராஜர் கட்டினார்.காமராஜர் காலத்துக்கு பின், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நீர் ஆதாரம் அளிக்கும் ஆனைமலை -நல்லாறு திட்டம் வந்தே தீரும்.எனக்கு ஒரே ஓர் ஆண்டு மட்டும் அவகாசம் கொடுங்கள். சோமனுாரில் மத்திய அரசின் சார்பில் ஜவுளி சந்தை அமைக்கப்படும். நுால் வங்கி திட்டத்தால் நுால் விலை சீர்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K.n. Dhasarathan
ஏப் 08, 2024 11:09

ஐயா அண்ணாமலை ஒரே கேள்விதான், கேள்வி கேட்பாரும் இல்லாமல், கணக்கு தணிக்கையும் இல்லாமல், மக்களை, வங்கிகளை, பெரும் நிறுவனங்களை அதிகாரமாக கொள்ளை போல சொன்னால்!


பாரத இந்துத் தமிழன்
ஏப் 08, 2024 10:51

எல்லா எம்பிக்களையும் காப்பாற்றும் பொருட்டு, சிவகங்கை வேட்பாளர், கார்த்தி சிதம்பரம், முயன்றுள்ளார் எல்லா மக்களையும் எம்பிபார்க்க முடியாது என்றும், அதனை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளதில் நியாயம் இருக்கிறது எம்பிஆக தேர்ந்தெடுக்கப்பட, சில குணாதியங்கள் தேவை என்று, அவர் கூற்றின் மூலம் நாம் உணர முடிகிறது எம்பி ஒரு நகர் மன்ற வார்டு உறுப்பினர் அல்ல என்று முதலில் நமக்கு உரைத்திருக்கிறார் பாராட்டுக்கள் இரண்டாவதாக, ஒட்டுமொத்த தொகுதிக்கென்று விஷேசமாக, குறிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனை மக்களிடம் ஒரு பெருங்குறையாக இருந்தால், கட்சிக்கொள்கை, கட்சிப்பகை போன்றவற்றையெல்லாம் கடந்து தன் தொகுதி மக்களுக்கு நல்லது செய்து காட்டும் தனிப்பட்ட ஆற்றல், ஆங்கில அறிவு, இந்தி ஞானம், பிரதமர் மற்றும் பிற மந்திரிகளுடன் சகஜமாக கோபமின்றி விவாதித்தல், சாமர்த்தியமாக உரையாடல், தன் மாநில மக்களுக்கு உதவிபெற முயலுதல், அரசியல் அமைப்புச்சட்டம், தேசிய வரலாறு, போன்றவற்றில் அறிவு, ஞானம் கொண்டோரை மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று சொல்லாமல் சொல்லி நமக்கு அறிவுறுத்துகிறார் அவர் காட்டும் அளவு கோலில், களத்தில் உள்ள இன்றைய வேட்பாளர்கள் பத்து பேர் கூட தேறமாட்டார்கள் தன் கட்சி கொத்தடிமைகளாக, ஸ்கூல் பிள்ளைகள் போல் கூச்சல் போடுவதும், பேனர் காட்டி, பிரதமரையும், பிற மந்திரிகளையும், அவமதிப்பதும், வெளி நடப்பு மட்டுமே செய்வதும், ரௌடிக்கலாச்சாரம் மேற்கொள்வதும், கேண்டினில் வாழ்க்கை நடத்துவதும், இந்தியில் பேசினால் தூங்குவதும், ஒப்பற்ற நாடாளுமன்றத்தைக் கேவலப்படுத்தும் கட்சி வெறியர்களை மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது தன் அறிவையும், பேச்சுத்திறமையையும், அனுபவத்தையும், பயன்படுத்தி, தன் மாநிலத்திற்கோ, தன் தொகுதிக்கோ, உபயோகமாக இந்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் நன்மை செய்து கொடுத்திருந்தால் மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் அவர்களைத் தூக்கி எறியுங்கள் இந்தி தெரிந்தும் பேசாமல் கபட நாடகம் ஆடும் வேஷதாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம் கட்சி வெறியர்கள் வேண்டாம் மக்கள் அபிமானச் சிந்தனையும், தேசப்பற்றும், தேசம் சாதிக்கும் செயல்களில் கட்சி வேறுபாடின்றி பாராட்டும் குணமும், சரித்திரம், அரசியல், அரசியிலமைப்பு, நிர்வாகம், நிதி, மற்றும் நீதித்துறையில் போதிய அறிவு கொண்டோரை மட்டுமே தேர்ந்தெடுங்கள் நகர் மன்ற வார்டு உறுப்பினரை விட பத்து மடங்கு பெரியவர் எம்எல்ஏ ஆவார் தொகுதி எம்எல்ஏ வை விட பத்துமடங்கு பெரியவர் எம்பிஆவார் பாராளுமன்ற எம்பியின் பணி மிக புனிதமானது அழுத்தமானது காரியம் சாதிக்கவல்லது சிறந்த பாராளுமன்றப் பேச்சாளர்கள் எனும் பெயர் பெற்று, ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு நல்லது பெற்றுத்தர, தூயவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் புரோட்டா மாவு பிசைவது, இஸ்திரி போடுவது, மாட்டு வண்டி ஓட்டுவது, ஆட்டுக்கறி வெட்டுவது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவிக்கொடுப்பது, நெல் காயப்போடுவது, நாத்து நடுவது, சாயம் கலப்பது, வடை, பஜ்ஜி சுடுவது, போன்ற தனித்திறமைகள் பாராளுமன்றத்திற்கு உபயோகமற்றது என்று வேட்பாளர்கள் உணர வேண்டும் வாக்காளர்களும் அந்த சில்லரை வேலைகளில் உள்ள திறமைக்காக தேர்ந்தெடுக்க அவசியமில்லை சேவை மனப்பான்மை கொண்டோரை மட்டுமே தேர்ந்தெடுப்போம் நாம் அனுப்பும் வேட்பாளர்கள், தமிழகத்திற்கு பெருமை பெற்றுத்தரும் வகையில் அமையட்டும் மாற்றம் உருவாகட்டும் பாராளுமன்றம் கட்சி அலுவலகம் அல்ல அது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் கூடும் சர்வ வல்லமை கொண்ட சபை அதன் மேன்மை காப்பது நம் அனைவரின் கடமையாகும்


Sathishkumar.N
ஏப் 08, 2024 09:30

தன் உழைப்பில் வாழாமல் நண்பர்களை சுரண்டி வாழும் அண்ணாமலை போல வாழக் கூடாதுனு சொல்றீங்களா தலீவரே


NAGARAJAN
ஏப் 09, 2024 11:46

உண்மையான உண்மை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி