உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் பருப்பு, பாமாயில் அவகாசம் நீட்டிப்பு?

ரேஷன் பருப்பு, பாமாயில் அவகாசம் நீட்டிப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. கடந்த மாதம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, அப்பொருட்களை கொள்முதல் செய்வதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தாமதம் செய்தது. இதனால், மே மாதத்திற்கான பருப்பு, பாமாயிலை பலர் வாங்கவில்லை. அவர்களுக்கு இம்மாதம் முதல் வாரம் வரை வாங்க அவகாசம் அளிக்கப்பட்டது.தென் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில், பழைய விற்பனை முனைய கருவிக்கு பதில், புதிய கருவி வழங்கியதால், இம்மாதம் 4, 5ம் தேதிகளில் கார்டுதாரர்களுக்கு எந்த பொருட்களும் வழங்கப்படவில்லை. இதேபோல், தாமதமாக பொருட்கள் அனுப்பியது உள்ளிட்ட காரணங்களால், பல கடைகளில் கடந்த மாதத்திற்கு உரிய பருப்பு, பாமாயில் வழங்கப்படாமல் உள்ளது. அரசு வழங்கிய அவகாசத்திற்கு, இன்னும் இரு தினங்களே உள்ளன. எனவே, கடந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் முழுதும், எந்த தேதியிலும் வாங்கிக் கொள்ளும் வகையில் அவகாசம் அளிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

G.Subramanian
ஜூன் 06, 2024 21:25

ஆமாம் பாராளுமன்ற தேர்தலினால் 2 மாதமாக தமிழக அரசு மக்களின் தேவைகளை மறந்து தேர்தலே வாழ்க்கை என்று இருந,து விட்டார்கள். கடன் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள, அப்புறம் தருகிறேன் என்று நாள் கடத்துவது பழக்கம் தானே தமிழா உனக்குத் தெரியாத்தா ?


aaruthirumalai
ஜூன் 06, 2024 14:15

ஆட்டம் ஏற்கனவே அதிகமாக இருக்கும். இப்ப நாற்பது ரொம்ப அதிகமாக இருக்கும். இல்லேன்னு சொன்னா போய்ட்டே இருக்கனும்.


மேலும் செய்திகள்