உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவர் காக்கா தோப்பு பாலாஜி (39). 1990ம் ஆண்டுகளில் சாதாரணமாக சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி, பின்னர் வியாசர்பாடி நாகேந்திரன் தொடர்பால் தொடர் கொலைகள், ஆட்கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகளால் பிரபலமானார். இவர் மீது 50 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை போலீசார் வலை வீசி தேடி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று(செப்.,18) வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையில் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.,குடியிருப்பு பகுதியில் பாலாஜியை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் போலீசாரிடம் தப்பித்து செல்ல தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, தற்காப்புக்காக, போலீசார் நடத்திய என்கவுன்டரில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Dharmavaan
செப் 18, 2024 15:18

சரியான தீர்ப்பு.எல்லாமே இப்படி இருக்க வேண்டும் அப்போதுதான் சாமான்ய மக்கள் நிம்மதியாய் வாழமுடியும்


Apposthalan samlin
செப் 18, 2024 12:14

சூப்பர் 10 வழக்குகளுக்கு மேல் உள்ளவர்களை போட்டு தள்ளுவது சிறந்தது 50 வழக்கு ரௌடியே கொன்றது தப்பெ இல்லை


Rajathi Rajan
செப் 18, 2024 11:44

இது நமக்கு தெரிந்தது தானே ??


Krishnamurthy Venkatesan
செப் 18, 2024 11:31

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தன் கண்டனத்தினை வெளியிடுமா?


venugopal s
செப் 18, 2024 10:57

இது போன்ற நிகழ்வுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தால் மாநில அரசை பாராட்டுவோம், தமிழகம் என்றால் எதிர்ப்போம்!


nagendhiran
செப் 18, 2024 09:33

புல்டோசர்களுக்குதான் நாங்க எதிரி? மற்ற படி சுட்டு கொலையெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டுதான் நடக்கும்? எங்களுக்கு கவலையில்லை?


V RAMASWAMY
செப் 18, 2024 09:28

தீவிரவாதிகளையும், கயவர்களை, குண்டர்களை, குற்றவாளிகளையும் ஒடுக்க இது ஒன்று தான் வழி. விசாரணை, கேஸ், கோர்ட் என்று நியமங்கள் பார்த்தால், அதற்குள் பலப்பல குற்றங்கள் புரிந்துவிட்டு குற்றவாளிகளை வயதாகி தானே இறந்துவிடுவார்கள், பலரை கொன்றும் விட்டிருப்பார்கள்., தண்டனை பயம் இல்லாததாலும், அரசியல் வாதிகளின் பாதுகாப்பின் காரணங்களினாலும், குற்றவாளிகள் தைரியமுடன் நடமாடி குற்றங்களை பெருக்குகிறார்கள், குற்றவாளிகளையும் அதிகரிக்க செய்கிறார்கள்.


rama adhavan
செப் 19, 2024 00:22

அரசியல்வாதிகளுக்கு?


பாமரன்
செப் 18, 2024 08:51

கூடவே போலீஸ்கார் இடது கை சுண்டு விரலில் கட்டு ... நெற்றியில் சினிமாகாரிக மாதிரி பளபளன்னு ஒரு கட்டு இருக்கனுமே ஆபீஸர்... இப்போல்லாம் தமிழ் நாடு போலீஸ் ரெம்ப ஸ்ட்ரிக்டாமாமாமாம்... ரவுடி மாம்ஸ் ஒழுங்கா... அதாவது ஒழுங்கா கவனிச்சு... அதாவது கவனிச்சு சூதகமா இருப்பீங்களாம்... இல்லைன்னா பாத் ரூம்ல வழுக்கி விழ வேண்டும் வயர் கடிக்கனும் புத்சா டவலில்... ஆங் அதான்...


AMLA ASOKAN
செப் 18, 2024 08:16

எந்த ஆட்சியாக இருந்தாலும் இத்தகு நபர்கள் ஒரு ரௌடி ராஜியமே நடத்திக் கொண்டிருந்தவர்கள் . இவர் மேல் 50 வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் bail வாங்கி தங்களது அடாவடி வேலைகளை தொடர்வார்கள் . கொலை கொள்ளை , கற்பழிப்பு போன்றவை இவர்களுக்கு கை வந்த கலை . இவர்கள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளப்பட வேண்டியவர்கள். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள் . விமர்சகர்கள் வழமை போல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் .


VENKATASUBRAMANIAN
செப் 18, 2024 08:04

இதுதான் திராவிட மாடல்


புதிய வீடியோ