சினிமா தயாரிப்பாளர் டில்லிபாபு மறைவு
சென்னை: மரகத நாணயம், ராட்சசன், பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களை தயாரித்தவர் டில்லிபாபு, 50. ஆக்சஸ் பிலிம்ஸ் பேக்டரி பட நிறுவனம் வாயிலாக, உறுமீன் படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமானார். தற்போது, மிடில் கிளாஸ், வளையம், யார் அழைப்பது உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்தார். இதில், வளையம் படத்தில், அவரது மகன் தேவ் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.சென்னை பெருங்களத்துாரில் வசித்து வந்த இவர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிஅளவில் மருத்துவ மனையில் காலமானார்.