திருப்பூர்,:மொபைல் போனில் 'கேம்ஸ்' விளையாடுவோருக்காக, கட்டை விரல்களுக்கென துணி உறைகள், திருப்பூரில் தயாராகி விற்பனைக்கு வந்துள்ளன.பின்னலாடை உற்பத்தியில் கோலோச்சும் திருப்பூரில், கொரோனா காலத்தில் முகக்கவசம், கையுறை, முழு கவச உடைகள் தயாரிக்கப்பட்டன. இவை நல்ல வரவேற்பைப் பெற்றன. வாகனங்களை நீண்ட துாரம் ஓட்டுவோர், கையில் அழுக்குப் படியும் வேலை செய்வோர், துாய்மை பணியாளர் பலருக்கும், மறுமுறை பயன்படுத்தக்கூடிய துணி கையுறை பயனுள்ளதாக இருக்கிறது.கையுறை போன்றே கைக்கட்டை விரல்களுக்கென உறையையும், திருப்பூரில் உள்ள சில நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இவை, சிறு வணிக நிறுவனங்கள், பேன்சி கடைகளில் விற்கப்படுகின்றன. இரு உறைகள் கொண்ட ஒரு செட், 10 ரூபாய்.எதற்கு பயன்?
மொபைல் போனில் பல விதமான கேம்ஸ், இளைஞர்கள், சிறுவர்களால் விளையாடப்படுகின்றன. விரல்கள் தொடர்ந்து டச் ஸ்கிரீனை தொட்டுக் கொண்டே இருக்கின்றன. டச் ஸ்கிரீனில் வியர்வை படிவதால் ஈரப்பதம் ஏற்படுகிறது.இதைத் தவிர்க்கும் வகையில், இந்த விரல் உறைகள் உதவுகின்றன. 'வீணாகும் பனியன் துணிகளை பயன்படுத்தி, இவை எளிதாகத் தயார் செய்யப்படுகின்றன. இந்த விரல் உறைகளுக்கு சமீப காலமாக வரவேற்பு கூடியுள்ளது.