உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து

பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து ஆலையின் தற்காலிக உரிமத்தை ரத்து செய்து பெசோ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.சிவகாசி காத்தநாடார் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் 47. இவருக்கு நாரணாபுரத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற மகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 5:55 மணியளவில் ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் தரைமட்டமாயின. இதனைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலியம் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் (பெசோ) ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் ஈடுபட்டும் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி