உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5.54 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5.54 லட்சம் மோசடி

வேலுார்:வேலுார் அருகே, பகுதிநேர வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம், 5.54 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.வேலுார் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூரை சேர்ந்தவர் திவ்யா, 29; இவரது ‍மொபைல் எண்ணுக்கு, பகுதிநேர வேலை தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., ஒன்று வந்துள்ளது. அதில் கூறும் பணிகளை செய்து முடித்தால், கமிஷன் தொகை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய திவ்யா, அந்த எஸ்.எம்.எஸ்.,ல் இருந்த லிங்கில் சென்று பணிகளை செய்தார். இதையடுத்து பணத்தை முதலீடு செய்தால், அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அவர் பணத்தை முதலீடு செய்து பணிகளை செய்ய தொடங்கினார். ஒரு கட்டத்தில், 5.54 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தார். அதற்கான பணத்தை திரும்ப பெற முயன்றபோது, அவரால் எடுக்க முடியவில்லை. பின் தன்னை தொடர்பு கொண்டவர்களுக்கு போன் செய்தபோது, பணத்தை எடுக்க, மேலும் பண முதலீடு செய்ய அவர்கள் கூறினர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா புகார் படி, வேலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ