உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம்: ஈ அடிக்கும் தனியார் பஸ்கள்

அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம்: ஈ அடிக்கும் தனியார் பஸ்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தால், தனியார் பஸ்களில், 40 சதவீதம் பயணியர் குறைந்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.சென்னை, மதுரை, நாகர்கோவில், நீலகிரியை தவிர மற்ற இடங்களில், மொத்தம் 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 1,500 டவுன் பஸ்கள்.மேலும், சாதாரண கட்டண அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம். கடந்த 2021ல் துவங்கிய இந்த இலவச திட்டத்தால், அரசு பஸ்களில் பெண் பயணியர் எண்ணிக்கை, 40 சதவீதத்தில் இருந்து, 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், தனியார் பஸ்களில் பெண் பயணியரின் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தர்மராஜ் கூறியதாவது:இரு சக்கர வாகனங்கள், கார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பஸ்களில் பயணியர் கூட்டம் பெரிய அளவில் இல்லை. அரசு சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கு இலவச பயண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால், தனியார் பஸ்களில், 40 சதவீதம் வரை கூட்டம் குறைந்துள்ளது. இதற்கு டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்கள் பெருக்கமும் ஒரு காரணம்.முன்பெல்லாம், ஒரு பஸ்சில் அதிகபட்சமாக, தினமும் 2,300 பேர் பயணம் செய்தனர். தற்போது, 1,300 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். டீசல், உதிரிபொருட்கள் விலை உயர்ந்து வருவதால், எங்களால் இழப்பை சரிசெய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம்.கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில், தனியார் பஸ்களுக்கு கி.மீ.,க்கு 1 ரூபாய் என, கட்டணம் இருக்கிறது. தமிழகத்தில் கி.மீ.,க்கு 58 காசு மட்டுமே கட்டணம். பொது போக்குவரத்து வசதியைப் பாதுகாக்க, தமிழக அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganchaiyan
ஆக 03, 2024 20:57

தனியார் 58பைசா கி.மீ அரசு எக்ஸ்பிரஸ் பைபாஸ் என ஏமாத்தி புடுங்குவதும் இங்கதாஙங்க


Ganchaiyan
ஆக 03, 2024 20:53

ஒரு பக்கம் மகளிர் இலவசம் மறுபக்கம் எக்ஸ்பிரஸ் பை-பாஸ் 1-1 என கொள்ளை கி.மீ.58 பைசா என்பது ஏமாற்றுவேலை


Ganchaiyan
ஆக 03, 2024 20:48

தமிழ்நாட்டில் ௧கி.மீ க்கு 58 பைசா என்பது ஏமாற்றுவேலை. ஒரு பக்கம் மகளிர் இலவசம் பேருந்து மறுபக்கம் எக்ஸ்பிரஸ் பை-பாஸ் என பிடுங்கி விடுகின்றனர்


G VEERAMANIKANDAN
ஆக 02, 2024 20:59

மகிழ்ச்சி போக்குவரத்து துறை அரசிடம் இருப்பதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது. சில குறைகள் உள்ளது அதை சரி செய்ய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழ்வேள்
ஆக 02, 2024 17:45

தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர் அடிக்கும் லூட்டிக்கு அளவு இல்லை .பெண்களை கண்டால் பல்லை அளிப்பது , அக்கப்போர் செய்வது ..ஊரில் உள்ள அத்தனை விடலைகளும் கண்டக்டர் ,கிளீனர் ..அப்புறம் இலவச பஸ் கிடைத்தால் உங்கள் வண்டிக்கு எப்படி பெண்கள் வருவார்கள் ?


RAAJ
ஆக 02, 2024 14:46

மகளிருக்கு இருக்கு கட்டணமில்லா பேருந்துகள் எல்லாம் ஓட்டை உடைசல் வண்டிகள். இருக்கைகள் ஊஞ்சலாடுகின்றன. மழை பெய்தால் ஜன்னல் கதவுகளை மூட முடியாது. ஓட்டுனர்களின் நிலைமை தான் பாவம்.


RAAJ68
ஆக 02, 2024 14:13

மகளிர் இலவச பேருந்தால் ஷேர் ஆட்டோக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்கள் அப்படியும் திமுகவுக்கே ஓட்டு போடுகின்றனர். ஓட்டுக்காக அரசு போக்குவரத்துக்கு நஷ்டம் விளைவிக்கிறது தமிழக அரசு. எங்கு சென்றாலும் கட்டணம் இல்லாத பயணமாக மாற்ற வேண்டும் கர்நாடகத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களிலும் கட்டணம் கிடையாது மகளிருக்கு.


Matt P
ஆக 02, 2024 07:39

தன் அரசு தலையிலும் மண்ணை அள்ளிபோட்டு பக்கத்திலுள்ளவன் தலையிலும் மண்ணை போட்டு நல்லாவே விளையாடுறாரு தலைவரு


visu
ஆக 02, 2024 07:10

எதை திட்டம் போடுறாங்க


Kundalakesi
ஆக 02, 2024 05:30

தமிழகத்தில் கி.மீ.,க்கு 58 காசு மட்டுமே கட்டணம் பொய். கோவையில் தனியார் பேருந்தில் 14 கிமி கு 15 ரூபாய் கட்டணம். கண்டக்டர் டிக்கெட் தருவதில்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை