உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச பயண திட்டத்தால் கோடிக்கணக்கான பெண்கள் பலன்: உதயநிதி பேச்சு

இலவச பயண திட்டத்தால் கோடிக்கணக்கான பெண்கள் பலன்: உதயநிதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: 'திமுக அரசு கொண்டு வந்த இலவச பயண திட்டத்தால், 460 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இது தான் அந்த திட்டத்தின் வெற்றி' என உதயநிதி பேசினார்.திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஓட்டு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசியதாவது:திமுக மற்றும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. கடந்த லோக்சபா தேர்தலில் நமது எதிரிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தனர். தற்போது பிரிந்து தேர்தலை சந்திக்கின்றனர். 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்தால், திருவள்ளூரில் நான் மாதம் 2 நாள் தங்கி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.

460 கோடி பயணங்கள்

முதல்வர் ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பெரிய வெற்றியை கொடுத்தனர். பா.ஜ., மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் ஓட்டு கேட்டு வரும் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்புங்கள். ஒரு திட்டத்தை அரசு அமல்படுத்தினால், எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை பெண்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். இலவச பயண திட்டத்தால் 460 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இது தான் அந்த திட்டத்தின் வெற்றி. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

தமிழக மக்கள் தயார்

பா.ஜ., அரசை தோற்கடிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். மதுரை எயம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரு கல் வைத்து விட்டு, மருத்துவமனை என்று கூறுகிறார்கள். ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. பா.ஜ.,விடம் கேள்வி எழுப்பினால் இபிஎஸ்.,க்கு கோபம் வருகிறது.பா.ஜ., மற்றும் இ.பிஎஸ்., இடையே கள்ளக் காதல் உள்ளது. மாநில உரிமைகளை எல்லாம் விட்டு கொடுத்து விட்டார். பா.ஜ.,வின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்தான் நம்முடைய வேட்பாளர் சசிகாந்த் செந்தில். நீங்கள் செலுத்தும் ஓட்டு மோடி தலையில் வைக்கும் வேட்டு. வேட்டு வைப்பீர்களா?. இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Oviya Vijay
மார் 29, 2024 21:09

உண்மை... இதனால் பயனடைந்த பெண்களுக்குத் தெரியும்


மோகன்.V
மார் 29, 2024 20:34

வா..வா..உன்ன மண்ணை கவ்வ வைக்க காத்திருக்கிறோம்..


selvelraj
மார் 29, 2024 20:33

என்ன மேஸ்திரி கைல செங்கல்ல காணோம் தமிழ்நாட்டுல தேர்தல் எப்போது மறுபடியும் சொல்லுங்க பார்ப்போம்? பஸ் இலவசம் என்று சொல்லி மரியாதைக்குரிய தாய்மார்களை இழிவாக பேசுவது நியாயமா? ஓ மறந்துட்டேன் இது திராவிட மாடல் ஆட்சி பெண் காவலர் இடுப்பை கிள்ளுவதும் காவாலா காவாலா பாட்டு போடுவதும் , தாங்கள் பேசும் போது இளைஞர்கள் சீட்டு ஆடுவதுதான் இயல்பானது


தமிழ்வேள்
மார் 29, 2024 20:29

தாய்க்குலத்தை பிச்சை கும்பல் என்று சொல்லும் இவரை பிரச்சாரம் செய்ய போகும் இடமெல்லாம் கழற்றி வெளுத்து துரத்த வேண்டும்


Soopu sudalai
மார் 29, 2024 19:57

Fraudu udaya


Palanisamy Sekar
மார் 29, 2024 19:14

அப்படி கணக்கு காட்டிவிட்டு மஸ்டர் ரோல் ஊழலை போல இதிலும் ஏகத்துக்கு சம்பாதித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை ஆட்சியை விட்டுப்போனதும் இதுபற்றிய விசாரணை கமிஷனை அமைக்க கோருவோம் தொட்டதிலெல்லாம் ஊழலா?


ManiK
மார் 29, 2024 19:07

தம்மாதுண்டு அதுவும் எங்க வரி பணத்துல freea கொடுத்துட்டு இப்படி போற இடமெல்லாம் சொல்லிட்டு திரியரது overa இல்ல?!


ram
மார் 29, 2024 18:30

நீங்க மண்ணை கவ்வுறது நிச்சையம்.. என்ன பொய் சொன்னாலும் எடுபடாது தலைவரே..


Balasubramanian
மார் 29, 2024 17:34

மோடி கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 10 கோடி நபர் பணப் பட்டுவாடா செய்கிறார்கள்! மாதா மாதம் இருபது கோடி குடும்பங்கள் இலவச அரிசி கோதுமை (தமிழ் நாடு உட்பட) பெறுகின்றனர்! 3: கோடி குடும்பங்கள் இலவச கேஸ் பயனாளிகள், இன்னும் பல! நீங்கள் கொடுக்கும் பெண்கள் ஊக்கத் தொகை (அதுவும் கடந்த ஆறு மாதமாக மட்டுமே தகுதி அடிப்படையில்)மச்சான் உங்களுக்கு பெண்கள் ஓட்டு விழட்டும் பிறகு பார்க்கலாம்!


Lion Drsekar
மார் 29, 2024 17:27

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்ஹிரண்யாய நமஹ , ஹிரண்யாய நமஹ வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை