உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த நிறுவனத்திடம், என்ன விலைக்கு மின் மீட்டர்கள் வாங்க வேண்டும்?

எந்த நிறுவனத்திடம், என்ன விலைக்கு மின் மீட்டர்கள் வாங்க வேண்டும்?

சென்னை : எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்க வேண்டும், அதன் விலை உள்ளிட்ட விபரங்களை, தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ளது. வீடு, தொழில் நிறுவனங்களில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் மீட்டர்களை, மின் வாரியமே அமைத்து தருவது வழக்கம். இதற்காக, நுகர்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது, மீட்டர்கள் கொள்முதல் குறைந்துஉள்ளதால், 'மீட்டர் இல்லை' எனக்கூறி விண்ணப்பதாரர்களை, வாரிய ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர். இதனால், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தடுக்க, மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரே மீட்டரை நேரடியாக வாங்க, மின் வாரியம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. தற்போது, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்கள் வாங்க வேண்டும்; அவற்றின் விலை விபரங்களை, மின் வாரியம் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்கி, வாரிய பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும். அதை பரிசோதித்து ஊழியர்கள் பொருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !