உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்லா வச்சு செய்யுறாங்க., சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்: ஒரு வருடம் வெளியே வர முடியாது!

நல்லா வச்சு செய்யுறாங்க., சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்: ஒரு வருடம் வெளியே வர முடியாது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு செய்து வந்த சவுக்குசங்கர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாது.ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்துள்ளார் என சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவதுாறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சங்கர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1r02rdj4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீ்ப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார். குண்டர் சட்ட நடவடிக்கைகான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்தனர். சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கையை ஒடித்தது போலீசாரா ?

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தேனியில் இருந்து கோவைக்கு போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் சில நிமிடங்களில் அவர் காயமடையவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வரும்போது வலது கையில் முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. இவரது கையை போலீசார் உடைத்து விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரது வக்கீல் பேட்டியளித்தார். இந்நிலையில் அவர் வெளியே வரமுடியாத அளவிற்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் போலீசார் சவுக்குசங்கரை கட்டம் கட்டி விட்டனர் என்றே பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

LION Bala
மே 15, 2024 17:26

சவுக்கு சங்கர், கடுமையான அரசியல் விமர்சனம் செய்வதற்கு இன்னும் தனது தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது அவர் தனக்கென்று ஓர் நிலையான பின்புலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது அந்த பின்புலம் சவுக்கு சங்கரை கைவிட்டு விட்டதோ என தோன்றுகிறது


subramanian
மே 14, 2024 21:32

நீதிபதிகளும், மனித உரிமை ஆணையம் அரசாங்கத்தின் கை கூலிகள் ஆக உள்ள வரை இந்த அட்டுழியம் தொடர்ந்து நடக்கும்


subramanian
மே 14, 2024 21:29

இந்த காவல் துறை ஏவல் துறையாக உள்ளது மனசாட்சி உள்ள அதிகாரிகள் இப்படி செய்ய மாட்டார்கள் விமர்சனம் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது ஜனநாயக படுகொலை சவுக்கு சங்கரன் கண்ணீர் இந்த திமுக வை எரிக்கும்


Raa
மே 13, 2024 11:13

பெண்போலீஸை இழிவுபடுத்தினால் குண்டர் சட்டமாம் என் அன்னை மதுரை மீனாக்ஷி அம்மனை, இழிவுபடுத்தியவனுக்கு என்ன ஆபீசர் தண்டனை கொடுத்தீர்கள்? எந்த குண்டர்/ஒல்லி சட்டத்தில் அந்த நபரை கைது பண்ணினீர்கள்? அவள் கேக்கமாட்டாள் என்ற அலக்ஷியம் தானே இருக்கு உங்களுக்கெல்லாம்


DHARMARAJAN DURAIRAJAN
மே 13, 2024 14:41

ஐயோ பாவம் சட்டத்தில் மீனாட்சி அம்மாவை திட்டினால் தண்டனை எதுவும் கிடையாது என்று உங்களுக்கு தெரியாது போல ஆனால் மீனாக்ஷி அம்மா தண்டனை நிச்சயம் தருவாள் நீங்கள் கவலை படாதீர்கள்


Paulraj Ganapathy
மே 13, 2024 07:12

A Dravidian fanatic youtuber avenged irretrievably for unleashing personal vilifications by the pseudo Dravidians A tit for tat game


M Ramachandran
மே 12, 2024 19:19

யாதெ போலீசு அரசு மாறியதுடன் யேவியர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் நம்ம போலீசு கேஸ் ஜோடிப்பதில் கில்லாடிகள் அப்போ பார்க்க வேண்டும் அடிக்கிறாங்களே அம்மா சப்தம் பலமாக கேட்க்கும்


Iniyan
மே 12, 2024 18:47

தி மூ க கொடிய நச்சு பாம்பு இந்த கட்சியை வேரோடு அழிக்க வேண்டும்


முருகன்
மே 12, 2024 17:56

நா கூசும் வகையில் பேசி விட்டு தப்ப முடியாது


Mathi
மே 12, 2024 16:48

போலீஸ் அடித்து துன்புறுத்துவது தவறு


வீரபத்திரன்,கருங்காலக்குடி
மே 12, 2024 16:26

இந்த சவுக்கு சங்கர் எப்போது மோடியையும் பாஜகவையும் தேர்தல் முடியிற வரை வச்சு செய்வோம் அடிச்சு ஆடுவோம்னு ட்வீட் போட்டானோ அப்போதே கர்மா தன் வேலையை காட்ட தொடங்கி விட்டது இவனுக்கெல்லாம் பாவம் பார்க்க கூடாது. எத்தனை வழக்குகள் இவன் மீது இருக்கோ அத்தனையும் போட்டு இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு வெளியே வரவிடாமல் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்