உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அரகண்டநல்லுார் தரை பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கண்டாச்சிபுரம் அடுத்த அந்திலியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார், 25; திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் கார்த்திகேயன், 24; என தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிந்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பிரேம்குமார், கார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 31, 2024 11:52

திமுக ஆட்சியில் இருக்கும்வரையில் போதைப்பொருள் நடமாட்டம், உபயோகம் அதிகம் இருக்கும். திமுக ஒழியவேண்டும். போதைப்பொருள் விற்பவர்கள் தாமாக ஒழிவார்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ