உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தது ஆறு; போட்டியிட்டது ஒன்று! தேர்தல் போட்டி குறித்து பன்னீர்

தந்தது ஆறு; போட்டியிட்டது ஒன்று! தேர்தல் போட்டி குறித்து பன்னீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “லோக்சபா தேர்தலில், ஆறு தொகுதிகளை பா.ஜ., வழங்கியது. நம் ஆட்கள் தயங்கியதால், ஒரு தொகுதியில் மட்டும் நான் போட்டியிட்டேன்,” என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.சென்னையில் நேற்று முன்தினம் நடந்த, மாவட்ட ஆதரவு செயலர்கள் கூட்டத்தில் அவர் பேசியுள்ளதாவது:கடந்த சட்டசபை தேர்தலின்போது, அ.ம.மு.க., வை கூட்டணியில் சேர்ப்போம் என, பழனிசாமியிடம் கூறினேன். நத்தம் விஸ்வநாதனும் இதை எடுத்துரைத்தார்; ஆனால், பழனிசாமி அதை ஏற்க மறுத்துவிட்டார். 'அ.ம.மு.க.,வை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சேர்க்காமலேயே, 140 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என்றார் பழனிசாமி.

தயக்கம்

இதனால், ஜெயலலிதா நமக்கு கொடுத்துச் சென்ற ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்தோம். லோக்சபா தேர்தலில், ஒன்றிணைந்த அ.தி.மு.க.,வாக களம் இறங்குவோம் என்று சொல்லிப் பார்த்தோம். அதையும் ஏற்கவில்லை. இதனால் படுதோல்வியை சந்தித்தோம். அ.தி.மு.க., ஒன்றி ணைவதை பழனிசாமி விரும்பாததால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழு சார்பிலும், தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவெடுத்த பின், அக்கூட்டணியில் நம் சார்பில் போட்டியிடுவதற்கு வசதியாக, 16 தொகுதிகள் கேட்டோம். அவர்கள் ஆறு தொகுதிகளை தர முன்வந்தனர். ஆனால், நம் தரப்பிலான ஆட்கள் போட்டியிட தயங்கினர். வேறு வழியின்றி ராமநாதபுரம் தொகுதியில் நான் மட்டும் களம் இறங்கினேன்.மக்களும், தொண்டர்களும் நம் பக்கம் உள்ளனர். தனிக்கட்சி துவக்கும் எண்ணம் கிடையாது. அ.தி.மு.க.,தான் நம் கட்சி. விரைவில் ஒன்றிணைவோம். பழனிசாமி, கே.பி.முனுசாமி, உதயகுமார் என, ஒரு சிலர் மட்டும் அ.தி.மு.க., ஒன்றிணைய தடைக்கல்லாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

வாய்ப்பூட்டு

பின்னர் அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பேச கட்சியினரை அழைத்து கூட்டம் போடுவதாக பழனிசாமி தெரிவித்தார். ஆனால், இணைப்பு குறித்து பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டு விட்டார். “அ.தி.மு.க.,வில் இருந்து எங்களிடம் பலரும் பேசுகின்றனர். யார் பேசினர்; என்ன பேசினர் என்பதையெல்லாம் இப்போதைக்கு வெளியில் கூற இயலாது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கோபமாக பேசுவார். ஆனால், நல்ல மனிதர்; நல்ல கருத்தை கூறுவார். “கட்சி ஒன்றிணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற இயலாது என, அவர் கூறியுள்ளார். அவருடைய கருத்துதான், ஒட்டுமொத்த அ.தி.மு.க., தொண்டர்கள் கருத்து,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sundar R
ஜூலை 28, 2024 10:18

மோடிஜியிடம் பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருக்கும் நெருக்கம் பழனிசாமிக்கு இல்லை. இந்த சின்ன விஷயம் உள்ளூர் அதிமுக தொண்டர்களுக்குத் தெரியவில்லையே


Kadaparai Mani
ஜூலை 28, 2024 11:20

வெகு விரைவில் அந்த நெருக்கத்தால் அவருக்கு மத்திய அரசு கவர்னர் பதவி கொடுத்து கவுரவிக்கும். இப்படி கருத்து சொல்லி பாவம் பண்ணீர் அவர்களுக்கு இருக்கும் பெயரை மேலும் டேமேஜ் செய்து விட்டீர்கள் .உள்ளூர் அதிமுக தொண்டன் விவரமானவன் .அவன் தியாகத்தால் கட்சி என்றும் தமிழ் நாட்டில் அம்மா அவர்கள் கூறியது போல் ஐம்பது வருடங்களுக்கு முதன்மை கட்சியாக தமிழகத்தில் திகழும் .


அரசு
ஜூலை 28, 2024 07:53

பாரதீய ஜனதா கட்சி 16 சீட்டு கொடுக்க முன் வந்ததாக இவர் சொல்கிறார். அது உண்மை தானா என்று அண்ணாமலை அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.


அருணாசலம்
ஜூலை 28, 2024 09:38

16 தொகுதிகள் கேட்டதாகவும் 6 தொகுதிகள் தருவதாக கூறினார்கள் என்றும் தான் செய்தியில் உள்ளது.


கல்யாணராமன்
ஜூலை 28, 2024 11:36

16 தொகுதிகளை கேட்டோம் 6 தொகுதியில் போட்டியிட சொன்னார்கள், ஒன்றில் மட்டுமே போட்டியிட்டோம் என்றுதான் ஓ பி எஸ் சொல்கிறார்.


K.SANTHANAM
ஜூலை 28, 2024 07:15

இந்த ஓபிஎஸ், இபிஎஸ், முனுசாமி , ஜெயக்குமார் இவர்களை கட்சியிலிருந்து விலக்கிவிட்டு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தினகரன் தலைமையிலான குழுவிடம் அதிமுக நிர்வாகத்தை கொடுத்தால் கட்சி மீண்டு எழுவதற்கு வாய்ப்பு உண்டு.


Kadaparai Mani
ஜூலை 28, 2024 11:01

உங்கள் கட்சியை தமிழ்நாட்டில் சாவர்க்கர் பெயரை சொல்லி வளர்க்க பாருங்கள்.அடுத்த கட்சி பற்றி ஏன் கவலை படுகிறீர்கள் .அதிமுகவினர் யாரவது தமிழக பாஜக பற்றி கவலைப்படுகிறீர்களா .தினகரன் தனி கட்சி ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது .அவரே சொல்லாத கருத்தை நீங்கள் ஏன் சொல்லுகிறீர்கள் .உங்கள் எண்ணம் உங்கள் ஆடிட்டர் எண்ணம் எப்படியாவது அதிமுக இல்லாமல் செய்ய வேண்டும் .அதுதானே ..அதுதான் நடக்காது .பழனிசாமி நல்ல முறை இல் கழகத்தை வழி நடத்தி அதிமுகவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார் .புரட்சி தலைவர் செய்த தர்மம் ஆக்கட்சியை காப்பாற்றும் .


P Sundaramurthy
ஜூலை 28, 2024 06:36

முட்டாளை நம்பி பொறுப்பு கொடுப்பது திறமைக்காக அல்ல . சுயமாக சிந்திக்க தெரியாதவர்களிடம் இருந்து பதவி முழுமையாக திரும்ப வந்துவிடும் என்பதால்தான் .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை