உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 13), 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,120 ரூபாய்க்கும், சவரன் 64,960 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று (மார்ச் 14) காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மதியம் தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போது இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (மார்ச் 15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரண தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்தது. இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.640 குறைந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy Sekar
மார் 15, 2025 11:17

இந்த தங்கத்தின் விலை சரிவுக்கு காரணம் என்னவென்று யாராவது யோசித்த்தீர்களா? அது எங்களது தானைத்தலைவர்ர்ர்ர் ஸ்டாலினின் பட்ஜெட்டை பார்த்ததும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் சரிவை கண்டோர் அதிசயமாக பார்க்கின்றார்கள். தமிழக பட்ஜெட்டால் இன்றைக்கு தங்கத்தின் விலையில் சரிவு என்பது தமிழக பட்ஜெட் வந்தபிறகு ஏற்பட்ட மாற்றங்கள்தான் என்பதை நம்புங்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை