உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவர் கழிவறையில் மரணம்

அரசு மருத்துவர் கழிவறையில் மரணம்

சேலம் அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அருணகிரி 33 இருதய சிகிச்சை பிரிவில் பட்டம் பெற்று மருத்துவராக உள்ளார் இவருக்கு நந்தினி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது மருத்துவர் அருணகிரி சேலம் வின்சென்ட் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.இந்த நிலையில் மருத்துவர் அருணகிரி சேலம் அரசு மருத்துவமனையில் இருதயப் பிரிவில் பணியாற்றி வருகிறார் வழக்கம் போல இன்றும் பணிக்கு வந்துள்ளார் காலை சுமார் 10 மணி அளவில் மருத்துவர் அருணகிரி வெளியே சென்ற நிலையில் வெகு நேரமாகியும் இருதய மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர் அருணகிரி வராததை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மாலை 4 மணியளவில் மருத்துவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர் பின்னர் கழிவறைக்கு சென்று பார்த போது மயங்கி நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஊழியர்கள் மருத்துவர் அருணகிரியை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை புற காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மருத்துவர் அருணகிரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் அருணகிரிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் அரசு மருத்துவமனை கழிவறையில் இருதய சிகிச்சை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mayavan
மே 10, 2024 15:57

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆணடவரை மனதார பிரார்த்திக்கிறேன்


Natchimuthu Chithiraisamy
மே 08, 2024 18:56

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது என்கிற செய்தி போல் உள்ளது இளைஞர்களே தயவு செய்து ப்ரெசெர்வெட்டிவேவ் உள்ள பொருள்களை வாங்கி சாப்பிடாதீர்கள்


Ramesh Sargam
மே 07, 2024 20:58

இருதய சிகிச்சை மருத்துவருக்கே மாரடைப்பு இந்த இளம் வயதில் இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டிருக்கக்கூடாது வருந்துகிறேன் அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்


Muralidharan raghavan
மே 08, 2024 10:06

பழைய சந்ததியினர் வயதிற்கு மேல் இப்போதும் ஆரோக்கியமாக உள்ளனர் ஆனால் தற்போது இளம் வயது மரணங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் எங்கு தவறு நடக்கிறது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி