உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 135 நகரங்களில் நெருக்கமாக வீடுகள் கட்ட அரசு புதிய சலுகை

135 நகரங்களில் நெருக்கமாக வீடுகள் கட்ட அரசு புதிய சலுகை

சென்னை: புராதன சின்னங்கள் உள்ள, 135 நகரங்களில், பக்கவாட்டு காலியிடம் இல்லாமல், தொடர் கட்டடங்களாக வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் குறைந்தபட்சம், 840 சதுரடி நிலம் இருந்தால் மட்டுமே, கட்டட அனுமதி வழங்கப்படும். சென்னையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில், குறைந்த பரப்பளவு மனைகளில் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.குறிப்பாக, இத்தகைய இடங்கள், தொடர் கட்டட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், குறைந்த பரப்பளவு மனைகளில், பக்கவாட்டு காலியிடம் விடாமல், அடுத்தடுத்து வீடுகள் கட்ட அனுமதிக்கப்படும். இங்கு பெரிய அளவிலான அடுக்குமாடி கட்டடங்கள் வராது என்பதால், இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. இதை தமிழகம் முழுதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.அதை ஏற்று, முதல் கட்டமாக, புராதன கட்டடங்கள் உள்ள பகுதிகளில், இது போன்ற சலுகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக, பல்வேறு நகரங்களுக்கு, முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 23 நகரங்களில், முழுமை திட்ட தயாரிப்பு, இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும், 112 நகரங்களில் முழுமை திட்ட தயாரிப்பு, பல்வேறு நிலைகளில் உள்ளது. இந்த, 135 நகரங்களில் புராதன சின்னங்கள், பழங்காலம் தொட்டு வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளில், தொடர் கட்டடங்களை அனுமதிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு தெரு அடிப்படையில் இடங்களை வரையறுத்து, பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின், அந்தந்த பகுதிகளுக்கான முழுமை திட்டங்களில், திருத்தங்கள் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Krishna Rao
பிப் 25, 2025 08:02

புராதன சின்னங்கள் உள்ள, 135 நகரங்களில், பக்கவாட்டு காலியிடம் இல்லாமல், தொடர் கட்டடங்களாக வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவறான முடிவு. அனைத்து வீடுகளுக்கும் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டும், அப்போது தான் சுகாதாரம் காக்கப்படும்.


Jayachandran T
பிப் 24, 2025 22:17

பிரதம. இந்திரன் இலவச வீடு வேண்டும்


அப்பாவி
பிப் 24, 2025 11:21

பத்து வூட்டுக்கு ஒரு கழிப்பறை வெச்சுக்க அனுமதி குடுக்கலாம். மிச்சமாகும் இடத்தில் இன்னும் அஞ்சாறு வூடுகள் எக்ஸ்ட்ரா வா கட்டலாம்.


GMM
பிப் 24, 2025 09:43

பக்கவாட்டில் காலி இடம் மிக முக்கியம். ஒரு மாடி அதிகரிக்கலாம். காலி இடம் இல்லை என்றால் சுவர், குழாய் பராமரிப்பு கடினம்.காற்றோட்டம் இருக்காது. நோய் பரவும். 4 புறமும் காலி இடம் கட்டாயம் வேண்டும். 900 சதுர அடிக்கு கீழ் பாக பிரிவினை / பத்திர பதிவு கூடாது. பிரிவினை ஆகாத சொத்தை ஒருவர் வாங்கி கொள்ள வேண்டும். அல்லது இருவரும் சேர்ந்து விற்று பணமாக்கி, பிரித்து கொள்ள வேண்டும்.


premprakash
பிப் 24, 2025 13:12

அருமை சார்


Sivasankaran Kannan
பிப் 24, 2025 08:35

உருப்படாத யோசனை.. வாழ தகுதி அற்ற இடங்களாக அவற்றை மற்ற முதல் முயற்சி.. அந்த மொத்த ஏரியாவும் உபயோகமில்லாத பகுதியாக மாறும்.. ரியல் எஸ்டேட் அரசாங்கம்.. துப்பில்லாத மாடல்..


Laddoo
பிப் 24, 2025 07:06

ஆபத்தை / சண்டை சச்சரவுகள் / பிரைவசி மற்றும் பல பிரச்சனைன்னு பிற் காலத்தில் உண்டாக்கும். அரசுக்கு எச்சரிக்கை உஷார் & கவனம்.


Kasimani Baskaran
பிப் 24, 2025 06:57

பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் அடிக்கடி சண்டை போட சிறப்பான வசதி செய்து இருக்கிறார்கள்...


Bye Pass
பிப் 24, 2025 06:20

க்ராஸ் வென்டிலேஷன் இருக்காது ..சென்னையில் தனி வீடுகள் இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகி வருகின்றன ..கழிவு நீர் சாக்கடைகள் பழைய கால முறையிலேயே இருக்கின்றன குடிநீரும் பழைய முறைப்படி இருக்கிறது ..வியாதிகள் தான் அதிகமாகும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை