மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
1 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
சென்னை:நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த விதிமுறைகளில் திருத்தம் செய்யும் சட்ட மசோதா உட்பட, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, ஐந்து மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தும் விதிமுறை களில் திருத்தம் செய்து, தேவையான நகரங்களை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.நகராட்சிகள் விரி வாக்கம் செய்யப்படும்போது, அவற்றுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளின் சொத்துக்கள், வரி விதிமுறைகள் தொடர்பாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டாம் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இது தவிர, சென்னை மாநகர காவல் திருத்த சட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் ஓய்வு உச்சவரம்பை, 70ல் இருந்து 75 ஆக உயர்த்தும் திருத்த சட்டம், கழிவுநீர் இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த சட்ட மசோதா ஆகியவற்றுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago