உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே அமைச்சருடன் கவர்னர் ரவி சந்திப்பு 

ரயில்வே அமைச்சருடன் கவர்னர் ரவி சந்திப்பு 

சென்னை: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, கவர்னர் ரவி டில்லியில் சந்தித்து, தமிழகத்தில் நடந்து வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து, நேற்று ஆலோசனை நடத்தினார்.அவரது அறிக்கை:மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதித்தது மகிழ்ச்சி. அவர் தலைமையில், ரயில்வே துறை தமிழகம் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவது, மிகுந்த திருப்தி அளிக்கிறது. கடந்த 2014 முதல், தமிழகத்தில் 1,303 கி.மீ., புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,242 கி.மீ., பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளன. 715 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பயணிகளுக்கென அதிநவீன வசதிகளுடன் கூடிய, எட்டு வந்தே பாரத் நவீன ரயில்கள், இப்போது தமிழகத்தில் 19 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இயக்கப்படுகின்றன. மேலும், 33,467 கோடி ரூபாயில், புதிய தண்டவாளங்கள் அமைக்கும் 22 திட்டங்கள்; 2,948 கோடியில் 77 ரயில் நிலையங்களை, அம்ரித் பாரத் நிலையங்களாக மாற்றும் பணிகள், வேகமாக நடந்து வருகின்றன. இவை அனைத்தும், தமிழகத்தை ரயில்வே சேவைகளின் மிகப்பெரிய பயனாளியாக்குகின்றன. தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும், அளவற்ற அன்பு செலுத்தி வரும் பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை