உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் முகப்பு கண்ணாடி சேதம்  டிரைவர் காயம்: பயணிகள் மயக்கம் பெரும் விபத்து  தவிர்ப்பு

அரசு பஸ் முகப்பு கண்ணாடி சேதம்  டிரைவர் காயம்: பயணிகள் மயக்கம் பெரும் விபத்து  தவிர்ப்பு

ராமநாதபுரம்: ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பஸ் ராமநாதபுரம் அருகே லாந்தையில் வந்து கொண்டிருந்தபோதுமுன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்ததில் டிரைவர் தினகரன் காயமடைந்தார். முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்கள் மயக்கமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு அரசுபஸ்சை டிரைவர் தினகரன் 35, இயக்கினார். மாலை 4:00 மணிக்கு ராமநாதபுரம் அருகே லாந்தையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தபோது முகப்பு கண்ணாடி உடைந்தது. அதன் துண்டுகள் முகத்தில் குத்தி டிரைவர் தினகரன் காயமடைந்தார்.இருப்பினும் சுதாரித்துக் கொண்டு பஸ்சை பாதுகாப்பாக ரோட்டோரத்தில் நிறுத்தினார். இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்சில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்கள் மயங்கினர். தினகரனை அவ்வழியாக வந்த டவுன் பஸ்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மயக்கமடைந்த பெண்களையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இவ்விபத்தால் பஸ்சில் வந்த பயணிகள் மதுரை ரோட்டில் வெகு நேரமாக காத்திருந்த நிலையில் மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை