மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
50 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை : முத்துராமலிங்க தேவர் குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் பியூஸ் அளித்த புகார் அடிப்படையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலம் கோர்ட்டில், அந்த நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் தாக்கல் செய்த மனுவில், 'முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து, முத்துராமலிங்க தேவர் கூறியதாக, அண்ணாமலை தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக் கதைகளை கூறி, மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, அண்ணாமலை மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.இது தொடர்பாக, சேலம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், 'அண்ணாமலை மீது இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிய வேண்டும் என்பதால், அரசின் அனுமதியை பெற வேண்டும்' என்று உத்தரவிட்டார்.இதையடுத்து, அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலர் நந்தகுமார் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கான நகல், சேலம் கோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 'வழக்குகளைசந்திக்க தயார்'''கடந்த மூன்று ஆண்டுகளில், உண்மையை பேசியதற்காக, என் மீதும், பா.ஜ., நிர்வாகிகள் மீதும், பல்வேறு வழக்குகளை தி.மு.க., அரசு தொடர்ந்துள்ளது. மீண்டும் என் மீது புதிதாக ஒரு வழக்கு தொடர, அரசு அனுமதி அளித்துள்ளது. உண்மையை பேசியதற்காக வழக்கு தொடர்வதும், போதை ஆசாமிகளுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதும் தான், தி.மு.க., வின் வாடிக்கையாக உள்ளது. கடந்த 1956ல் முத்துராமலிங்க தேவர் கூறியதை, மக்களின் நினைவுகளில் இருந்து துடைத்தெறிய விரும்பிய தி.மு.க., அரசுக்கு நன்றி. உண்மையை வெளிக்கொண்டு வருவதில் இருந்து, எங்களை தடுத்து நிறுத்த தி.மு.க.,வால் முடியாது. எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், அவற்றை சந்திக்க தயாராக இருக்கிறோம்.- அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.
50 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago