மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
ஊட்டி : ''புதிய கல்வி கொள்கை புது இந்தியாவை உருவாக்கும்,'' என, ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ரவி பேசினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலை துணைவேந்தர்களின் 3ம் ஆண்டு மாநாடு நேற்று துவங்கியது. கவர்னர் ரவி தலைமை வகித்து மாநாட்டை துவங்கி வைத்து பேசியதாவது:கடந்த, 2021ல் கவர்னராக நான் பொறுப்பேற்று, பல்கலைகளின் வேந்தரான போது, மாநிலத்தில் உள்ள பல்கலைகள் தரம் குறைந்து மோசமான நிலையில் இருந்தன. ஒவ்வொரு பல்கலைகளும் பிரச்னைகளுடன் மற்ற பல்கலைகளுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்கலைகளின் பிரச்னைகளை சரி செய்து அவற்றை ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. துணைவேந்தர்கள், உயர்கல்வியின் பாதுகாவலர்களாக உள்ளனர். 5வது இடம்
அதில், ஏற்பட்டு வரும் மாற்றங்களில் அவர்களுடைய பங்கு இன்றியமையாதது. புதிய தேசிய கல்விக்கொள்கை ஏராளமான ஆலோசனைகளுக்கு பின் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த கல்வி கொள்கை நம் நாட்டை அடுத்த கட்டத் திற்கு கொண்டு செல்லும். இதற்கு முன் உலகம் சந் தித்த சவால்கள் பல உள்ளன. அது பெரிய அளவில் நம்மையும் பாதித்தது. சுதந்திரத்திற்கு பின் பொருளாதார நிலையில், 6-வது இடத்தில் இருந்த நாம், 11-வது இடத்திற்கு பின் தங்கியிருந்தோம். தற்போது, மீண்டும், 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். மிக விரைவில், 3வது இடத்திற்கு முன்னேற உள்ளோம்.தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த பட்டதாரிகள் வேலைக்காக பிச்சை எடுக்கும் நிலை உள்ளது. கல்வி இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால், அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். தங்கம் உள்ளது
இந்தியா சுதந்திரத்திற்கு முன், உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தது. இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். இந்தியாவில் பெரிய அளவில் தங்க சுரங்கங்கள் இல்லை. ஆனால், உலகில் அதிக அளவில் தங்கம் வைத்துள்ள நாடாக நாம் மாறியுள்ளோம். ஏனென்றால், இந்திய பொருட்களுக்கு உலக சந்தையில் நல்ல மதிப்பு இருந்தது. நம் இரும்பு உலக தரத்துடன் இருந்தது. இரும்பு, பின்னலாடை, ரசாயன உற்பத்தியில் முன்னணி நாடாக நாம் இருந்தோம். இதற்கு காரணம் நம்மிடம் இருந்த உத்வேகம். 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக' என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி, கல்வியாளர்கள், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். புதிய கல்வி கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.காரக்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் பார்த்த பிரதி சக்கரபோர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ., உலகளாவிய மனித மதிப்புகளுக்கான தேசிய குழு தலைவர் சரண், சிஸ்கோ நிர்வாக ஆலோசகர் ஸ்ருதி கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த மாநாட்டில், பல்வேறு பல்கலைகளை சேர்ந்த, 31 துணைவேந்தர் கள் பங்கேற்றனர்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago