உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோவில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்  

போக்சோவில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்  

கிள்ளை: 'போக்சோ' வழக்கில் தொடர்புடைய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அருகே கிள்ளை அடுத்த நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் மகன் ஜெகத் ஜீவா, 21; இவர், 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக, கிள்ளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து ஜெகத் ஜீவாவை கைது செய்தனர். இவர் மீது கிள்ளை போலீசில் 2 'போக்சோ' வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டரின் உத்தரவையேற்று, கடலுார் மத்திய சிறையில் உள்ள ஜெகத் ஜீவாவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
செப் 13, 2024 08:55

Police & Magistrates have Lost Credibility as they Never Detect-Punish Vested Conspiratorial False Complainant Gangs esp women, SCs, Unions/ groups, advocates etc, CaseHungry Criminals, NewsHungry Media, VoteHungry Politicians


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 13, 2024 07:27

இங்கே எழுதும் எந்த ஊ பீ யி க்கு சொந்தக்காரனோ ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை