உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியருக்கு தொல்லை பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

மாணவியருக்கு தொல்லை பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக்கல்லுாரி தற்காலிக பேராசிரியர்களாக பணியாற்றி வந்த சதீஷ்குமார், முரளிராஜ், அன்பரசன் மற்றும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர் ராஜபாண்டியன் ஆகியோர், கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மூவரை, வால்பாறை கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியன் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜபாண்டியன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ