மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
1 hour(s) ago
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில் தாணிப்பாறை மலை அடிவார தோப்புகளில் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.இரு மாதங்களாக ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. செடி, கொடிகள் காய்ந்து, மலையில் வறண்ட நிலை உள்ளது. அடர் வனத்தில் நீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைந்துள்ளதால் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தற்போது அடிவாரத்தில் நடமாட துவங்கியுள்ளன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள ஒரு சில மாந்தோப்புகளில் தற்போது மாங்காய் விளைச்சல் உள்ளதால் அந்த வாசனையை உணரும் வனவிலங்குகள் மாலை நேரங்களில் அடிவாரம் வந்து மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.சதுரகிரி மலைப்பகுதியிலும் வெயிலில் தாக்கம் அதிகளவில் உள்ளதால் தாணிப்பாறை மலையடிவார தோப்புகளில் தற்போது கரடிகள் நடமாடி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறை அடிவார தோப்பு ஒன்றியல் தூங்கிய காவலாளி செல்வத்தை 59, கரடி தாக்கியது. இதனால் விவசாயிகளும், தோப்பு காவலாளிகளும் அச்சமடைந்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்து அடிவாரம் திரும்பிய மூன்று பக்தர்களை கரடிகள் தாக்கி காயப்படுத்தின.வனத்துறையினர் கூறியதாவது: சதுரகிரி மலைப்பகுதியில் கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.தற்போது அடிவார தோப்புகளில் குளுமையும், பசுமையும் காணப்படுவதாலும் மா, தென்னை விளைச்சல் நன்றாக இருப்பதாலும் கரடிகள் தோப்பு பகுதிகளில் வந்திருக்கலாம். வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றனர்.
1 hour(s) ago