உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கொட்டி தீர்த்தது கனமழை: 31 விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் கொட்டி தீர்த்தது கனமழை: 31 விமான சேவைகள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நேற்று இரவில், பெய்த பலத்த மழையால், 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.சென்னையில் நேற்று இரவு (ஜூலை 12) அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராஜ நகர், வடபழனி, சிந்தாதிரிபேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.கனமழையால், சுமார் 31 விமான சேவை பாதிப்பால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சூறைக்காற்று வீசியதால், தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. 15க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தேனி, கோவை, விழுப்புரம், நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று (ஜூலை 13) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

angbu ganesh
ஜூலை 13, 2024 14:38

வாய்பே இல்ல சார் விடியாத ஆட்சிக்கு விடியல்னு பேர் மாதிரி இது


vpurushothaman
ஜூலை 13, 2024 12:55

சென்னைக்கு எப்போதுதான் வடிகால் வசதியோடு விடிவு காலம் பிறக்குமோ


மேலும் செய்திகள்