உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி கோவைக்கு கன மழை எச்சரிக்கை

நீலகிரி கோவைக்கு கன மழை எச்சரிக்கை

சென்னை:நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.அதேநேரம், இன்று வலுவான தரைக்காற்று, மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் வீசும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, அவலாஞ்சியில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை