உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிதியில் திருமண மண்டபம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கோவில் நிதியில் திருமண மண்டபம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான வாகீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், 22 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3ல் அரசாணை வெளியிட்டது.இப்பணியை அந்தந்த கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை. அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிதியை நலிவடைந்த கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள பயன்படுத்தலாம். ஹிந்து மதத்தை பரப்ப மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் துவக்க கோவில் நிதியை பயன்படுத்தலாம். இதற்கு முரணாக திருமண மண்டபம் அமைக்க பயன்படுத்துவது விதிமீறலாகும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அறநிலையத்துறை செயலர், கமிஷனர், காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்., 2க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Dharmavaan
மார் 06, 2025 09:15

கோர்ட் நேர்மையாக செயல்பட வேண்டும் கோயில் பணம் வியாபாரம் செய்யப்படுகிறது சமூக நன்மைக்கு ஹிந்து சமய வளர்ச்சிக்கு பதிலாக திரட்டுத்தரவிட கூட்டங்களால்


chandrasekar
மார் 06, 2025 09:05

ஆமாம். வெறும் நிலங்களை ஆக்கிரமித்து போரடித்துவிட்டது. மண்டபத்தோடு நிலம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஆக்கிரமிக்க. அதிலேயும் கொள்ளிவைக்க ஒருவர் கேஸ் போட்டுவிட்டாரே இந்த தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வயித்தெரிச்சல் எவ்வளவுதான் பணம் பாட்டில் பிரியாணி கொடுத்தாலும் இந்த தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட ரசனையற்றவர்கள் நம்ம சொத்திலும் பங்கு கேட்பார்கள்போலிருக்கிறதே


Vivekanandan Mahalingam
மார் 06, 2025 09:04

22 கோடியில் 10 கோடியாவது கொள்ளை அடிக்க வேண்டுமே - அதற்காகத்தான் - 1000 கோவிலில் கும்பாபிஷேகம் - ஒரு கோவிலுக்கு ஒரு கோடியாவது கொள்ளை - அறமற்ற துறையை மத்திய அரசு மூட வேண்டும் .


Ethiraj
மார் 06, 2025 07:15

HARCE officers must be transferred to remote areas for violating norms


Kasimani Baskaran
மார் 06, 2025 06:24

இந்து அறநிலையச்சட்டப்படி இந்து அறநிலையத்துறைக்கு கோவில்களை நிர்வகிக்கும் உரிமை கிடையாது.


Karthik
மார் 06, 2025 10:27

அதெல்லாம் சொன்னா யாரு கேக்கரா..??


சமீபத்திய செய்தி