உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு

சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு

மதுரை: அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கம்பம், கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள்; சாலைகளில் வைக்கக்கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்களை அவர்களின் சொந்த அலுவலகங்களில் நிறுவிக் கொள்ளலாம். பொது இடங்களில் அவற்றை நிறுவுவது ஏற்புடையதல்ல; அனுமதிக்க முடியாது' என, சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்தது. பொது இடங்கள் , சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து அம்மாவாசிதேவர் என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கை இன்று (மார்ச் 06) ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: * கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. * அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கம்பம், கொடிகளை வைத்துக்கொள்ளுங்கள். * சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது; சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். * மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள விஷயத்தில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம். * சாலைகளில் தடையற்ற போக்குவரத்தும், பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம். * நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடி மரங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவால், இனி பொது இடங்களில் கட்சிகள் தங்கள் தலைவர்களின் சிலைகளை நிறுவ முடியாது. போக்குவரத்திற்கு இடையூறாக சிலைகள் அமையாது. ஏற்கனவே உள்ள சிலைகளும் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sridhar
மார் 06, 2025 22:10

நாங்க கொடி கம்பம் நடும் இடத்தில நீங்க ஏன் சாலை போட்டீங்க .


ديفيد رافائيل
மார் 06, 2025 20:57

ஆளுங்கட்சிக்கு நல்லா உரைக்குற மாதிரி சொல்லுங்க


V RAMASWAMY
மார் 06, 2025 17:10

ஹைகோர்ட் கால நிர்ணயம் வைத்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அதற்கான அமைச்சரகத்தையும் அமைச்சரையும் கேள்வி கேட்கவேண்டும். கொடிக்கம்பங்கள் மட்டுமல்ல, மூலைக்கு மூலை நடுரோட்டில் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் உண்டாக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளையும் அகற்ற உத்திரவு போடவேண்டும். தேவையென்றால் ஒரு சிலை மியூசியம் அமைத்து அங்கு வைத்து தலைவர்களைப்பற்றிய உண்மையான தகவல்களையும் வைக்கலாம். ஒரு கால கட்டத்திற்குப்பின் அந்த தலைவர்களை பற்றி அறிய எவருக்கும் ஆவல் இருக்காது, அவர்கள் மீது ஆத்திரம் கூட வரலாம்


N Sasikumar Yadhav
மார் 06, 2025 16:09

திருட்டு திராவிட களவானிங்க அவன்களோட தலிவர் வருவதாக இருந்தால் நன்றாக இருக்கிற சாலையிலேயும் குழி தோண்டி கொடி நட்டு சாலைகளை நாசமாக்குகிறானுங்க இந்த மானங்கெட்ட திராவிட களவானிங்க


சுந்தர்
மார் 06, 2025 15:49

அரசே தன்னை தண்டித்துக் கொள்ளுமா? நடக்காது. நீதிமன்றம் சொன்னாலும் ஒருவரும் கேட்கமாட்டார். நீதிக்கு அல்வாதான்.


GMM
மார் 06, 2025 15:00

நீதிமன்றம் உத்தரவு தெளிவாக உறுதியாக உள்ளது. கட்சி கொடிகள் , அரசியல் தலைவர் சிலைகள் இடம் கிரயம் செய்து வைத்து கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் , கட்சி அனுதாபிகள் வீட்டில், கட்சியினர், கிளப் , ஓட்டல், மது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து கொள்ளலாம். கட்சியினர் கப்பல், விமானம், பஸ்சில் வைக்கலாம். கட்சி வேட்டி, சட்டை அணிந்து கொள்ளலாம் இத்தனை வசதி இருக்கும் போது பொதுமக்கள் இடத்தை ஏன் ஆக்கிரமிக்க வேண்டும்.? சாலைகளில் உள்ள கொடி, சிலைகள் அகற்றாவிட்டால் அடுத்த நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். சுவரொட்டி, பிளேஸ் போர்டு .. எதுவாக இருந்தாலும் பொது இடங்களில் இருக்க கூடாது. ஊரை அசுத்தமாக்கி விடும்.


panneer selvam
மார் 06, 2025 17:38

The issue is who will implement ? The culprit is government who themselves indulges the same activity .


PR Makudeswaran
மார் 06, 2025 14:29

ஏற்கனவே உள்ள குப்பைகளும் அது தான் சிலைகளும் அகற்றப் பட வேண்டும்.


Nagarajan D
மார் 06, 2025 14:25

இருக்குற கருமத்தை எல்லாம் எப்ப எடுப்பீங்க ஆபிசர்


மால
மார் 06, 2025 14:10

நடக்காது


ஆரூர் ரங்
மார் 06, 2025 13:52

மக்களே அகற்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுங்க நீதிமான்களே.


முக்கிய வீடியோ